IPL 2025: ஐபிஎல்லில் கட்டுப்பாடு.. பிசிசிஐ-க்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்தொடரில் மொத்தம் 74 போட்டிகள் 13 மைதானங்களில் நடைபெற உள்ளது. முதல் போட்டியாக மார்ச் 22ஆம் தேதி கொல்த்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்த்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த தினங்களில் மற்ற அணிகள் லீக் போட்டிகளில் மோத உள்ளன. லீக் ஆட்டத்திற்கு பிறகு ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா மைதானங்களில் நடைபெற இருக்கிறது. 

மேலும் படிங்க: ஹாரி ப்ரூக்கிற்கு பதில் மாற்று வீரர் யார்? டெல்லி கேப்பிடல்ஸ் குறிவைக்கும் இந்த 3 வீரர்கள்!

மே 20ஆம் தேதி குவாலிஃபையர் 1 நடைபெறும். இப்போட்டி ஹைதராபத்திலும், குவாலிஃபையர் 2 மே 23ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது. இறுதி போட்டியானது மே 25ஆம் தேதி கொல்க்கத்தாவிலே நடைபெறுகிறது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டியின்போது, தொலைக்காட்சிகளிலும், மைதானத்திலும் சில பொருட்களை விளம்பரம் செய்ய வேண்டாம் என மத்திய சுகாரதாரத்துறை அமைச்சகம், இந்திய கிரிக்கெய் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) கடிதம் எழுதி உள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை பிசிசிஐ அதாவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எழுதி உள்ள கடிதத்தில், இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் விளையாடாக ஐபிஎல் இந்தியன் பிரீமியர் லீக் உள்ளது. இதனால், புகையிலை, மது ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும். அதேபோல், புகையிலை அல்லது மது ஆகியவற்றின் நேரடி அல்லது மறைமுக தயாரிப்புகளை விளையாட்டு வீரர்களும், வர்ணனையாளர்களும் விளம்பரப்படுத்துவரை ஊக்கப்பட்டுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுப்பட்டுள்ளது.  

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா! கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.