கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் 2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இத்தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் ஐபிஎல்லின் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் முக்கிய வீரர்கள் பலர் வேறு அணிகளால் வாங்கப்பட்டனர். குறிப்பாக ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் என கடந்த சீசன்களில் அவர்கள் இருந்த அணிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்களே வேறு அணியால் வாங்கப்பட்டனர். இச்சூழலில் இது போன்ற அணிகளுக்கு கேப்டன்களை அறிவித்து வருகிறது அந்தந்த அணிகள்.
அந்த வகையில் லக்னோ அணியால் வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் அந்த அணிக்கு கேப்டனாகவும், கொல்கத்தாவில் இருந்து பஞ்சாப் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மட்டும் புதிய கேப்டனை நியமிப்பதில் குழப்பத்தில் இருக்கிறது.
மேலும் படிங்க: ஐபிஎல் தொடரைவிட்டு விலகும் முக்கிய வீரர்கள்.. முழு பட்டியல்!
கேப்டன் பதிவி வேண்டாம்
இந்த நிலையில் தான், டெல்லியால் 14 கோடிக்கு வாங்கப்பட்ட கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை நிராகரித்து உள்ளார். முன்னதாக லக்னோ அணியில் இருந்த போது அந்த அணியை வழிநடத்தினார். ஆனால் அவர் பெரிய தாக்கத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை. இதனால் மனமுடைந்த கே.எல்.ராகுல், நான் அணியில் ஒரு வீரராக இருக்க விரும்புகிறேன். கேப்டன் பதிவிதான் வேண்டும் என்று இல்லை. அணியில் ஓர் அங்கமாக இருந்தாலே போதும் என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி அணியின் கேப்டன் யார்?
கே.எல்.ராகுல் ஏற்கனவே பஞ்சாப் மற்றும் லக்னோ அணியை வழி நடத்தியதால் டெல்லி அணி நிர்வாகம் அவரை கேப்டனாக்க விருப்பியது. ஆனால் அவர் அதனை நிராகரித்துள்ளார். இதனால் டெல்லி அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழும்பி உள்ளது. இந்த நிலையில், கே.எல்.ராகுல் கேப்டன் பதவியை வேண்டாம் என கூறி இருப்பதால், ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேலை கேப்டனாக நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.
மேலும் படிங்க: IPL 2025: இடிக்கு மேல் இடி.. கே.எல்.ராகுல், மயங்க் யாதவ் ஐபிஎல்லில் இருந்து விலகல்?