2025 ஆம் ஆண்டிற்கான புதிய கேடிஎம் 390 டியூக் மாடல் டீலர்களுக்கு வர துவங்கியுள்ள நிலையில் புதிதாக கருமை நிறத்துடன் கூடுதலாக க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பெற்றதாக விற்பனைக்கு அடுத்த சில நாட்களுக்குள் விலை அறிவிக்கப்படலாம்.
390 டியூக் மாடலின் எஞ்சின் ஆப்ஷன் உட்பட அடிப்படையான டிசைன், மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் பெற்றிருக்கவில்லை. தொடர்ந்து 46 hp பவர் மற்றும் 39Nm டார்க் வழங்குகின்ற நிலையில் 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு ஆறு வேக கியர்பாக்ஸ் உடன் கூடுதலாக, ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உடன் க்விக் ஷிஃப்டர் பெறுகின்றது.
புதுப்பிக்கப்பட்ட கண்ட்ரோல் சுவிட்சுகள் உடன் க்ரூஸ் கண்ட்ரோல் மோடு பெற்றுள்ளதால் மிகவும் இலகுவாக நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் ரூ.18,000 வரை டியூக் விலை குறைக்கப்பட்டிருந்த நிலையில், வரவுள்ள புதிய 2025 390 டியூக்கின் விலை அடுத்த சில நாட்களில் வெளியாகலாம்.
image source – youtube/SkSajidRider