புதுடெல்லி,
மாநிலங்களவையில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பேசியதாவது: திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் தொடர்பாக தலைமைச்செயலர் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், பிஎம்ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழக அரசு ஆர்வமாக இருக்கிறது எனக்கூறியிருந்தார்.
மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகே புதிய தேசிய கல்விக்கொள்கை இறுதி செய்யப்பட்டது. 1963 ல் கொண்டு வரப்பட்ட மும்மொழிக் கொள்கைக்கும், தற்போதைய மும்மொழிக் கொள்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. உலகத்தின் தேவையை கருத்தில் கொண்டு தான் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. 5ம் வகுப்பு வரை அந்த மாநிலத்தின் மொழியில் தான் கல்வி கற்பிக்க வேண்டும் என கல்விக்கொள்கையில் கூறப்பட்டு உள்ளது.
தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன். தமிழ் மொழி அனைவருக்கும் பொதுவானது. பிரதமர் மோடி அரசு தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் விரோதமானது அல்ல. எந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை. திமுக எம்.பி.,க்களின் வலி எனக்கு புரிகிறது. என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்க தயார்” என்றார்.