PAK Train Hijack: “155 பேர் மீட்பு, 27 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..'' – பாகிஸ்தான் சொல்வதென்ன?

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானால் தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் பலூச் விடுதலை படை (Baloch Liberation Army – BLA), தொடர்ச்சியாகப் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, குவெட்டா ரயில் நிலையத்தில் இந்தப் படை குண்டுவெடிப்பு நடத்தியது. இதில், 26 பேர் கொல்லப்பட்டனர். இத்தகைய சூழலில், பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்தப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்கள், நேற்று பெஷாவார் நகருக்கு சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைச் சிறைபிடித்தனர்.

Balochistan in Pakistan

ரயிலில் பயணம் செய்த பயணிகள், பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் என 400-க்கும் மேற்பட்டோரை அவர்கள் பணயக்கைதிகளாக பிடித்துவைத்தனர். இதில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் பலூச் விடுதலை படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்புப் படை வீரர்கள் சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பின்னர், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட பலூச் விடுதலை படை, ரயிலிலிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகளை விடுவித்துவிட்டு, 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களை மட்டுமே பிடித்து வைத்திருப்பதாகவும், தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பிடித்து வைத்திருப்பவர்களைக் கொன்றுவிடுவோம் எனவும் தெரிவித்தது. இருப்பினும், பயணிகள் யாரும் விடுவிக்கப்படவில்லை என்றும், எல்லோரும் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Balochistan Train Hijack - சித்திரிப்புப் படம்
Balochistan Train Hijack – சித்திரிப்புப் படம்

அதோடு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்ப முடியாது என்று தெரிவிக்க, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். இந்த நிலையில், பலூச் விடுதலை படையினரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்று, 155 பயணிகளை மீட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து, பாதுகாப்புப் படை தரப்பில் வெளியான தகவலில், “155 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.