நடிகை குஷ்பு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சினிமா சார்ந்த சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், “பெண்களை மையமாகக் கொண்ட படம் எப்போதுமே பிளாக்பஸ்டர் ஆகாது. நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெறப்போவத்தில்லை… இப்போது காலம் மாறிவிட்டது என்றும் சொல்லப் போவதில்லை. உண்மைகளை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.

பெண்களை மையமாகக் கொண்ட `அரண்மனை 4′, `மூக்குத்தி அம்மன் 2′ போன்ற படங்கள் எப்போதாவது தான் வரும். இப்போதும் கான்கள், சூப்பர் ஸ்டார்கள், உலக நாயகன் ஆகியோருக்கு தான் தியேட்டர்கள் திறந்துள்ளன. எல்லோருக்கும் தியேட்டர்கள் கிடைக்க இன்னும் காலம் ஆகும்” என்று பேசியிருக்கிறார்.
தொடர்ந்து ஓடிடி தளம் குறித்து பேசிய அவர், ” ஓடிடி தளத்தில் பெண்கள் மிகச் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். டிம்பிள் கபாடியவை( பாலிவுட் நடிகை) எல்லாம் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வித்தியாசமான கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஓடிடி தளத்தில் பெண்கள் பணியாற்றுவதற்கு நிறைய ஸ்பேஸ் இருக்கிறது. ‘டார்லிங்ஸ்’, ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’, ‘டப்பா கார்டெல்’, `மகாராணி’ என எதுவாக இருந்தாலும், பெண் நடிகர்கள் பெரிய திரையில் செய்ய முடியாதவற்றை ஓடிடியில் செய்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…