விழுப்புரம் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நாளை விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து நாளை (வியாழக்கிழமை) காலை 9.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருவண்ணாமலை சிறப்பு ரயில் […]
