திருமலை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறியிருப்பதாவது:
ஏழுமலையான் கோயில் அன்னதான திட்டத்தை கடந்த 1985-ல் அப்போதைய முதல்வர் என்.டி.ராமாராவ் தொடங்கி வைத்தார். தற்போது தினமும் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. எஸ்.வி.அன்னதான அறக்கட்டளைக்கு இதுவரை 9.7 லட்சம் பக்தர்கள் நன்கொடை வழங்கி உள்ளனர்.
தற்போது நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.44 லட்சம் செலவாகிறது. இதுவரை 249 பக்தர்கள் ரூ.44 லட்சம் வீதம் நன்கொடை வழங்கி உள்ளனர். 139 பக்தர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கி உள்ளனர். தற்போது இத்திட்டத்தில் ரூ.2,200 கோடி நன்கொடை இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.