பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு: தமிழக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், பூந்​தமல்லி – பரந்​தூர் வரை நீட்​டிப்​புக்கு விரி​வான திட்ட அறிக்​கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் நேற்று முன்​தினம் சமர்ப்​பித்​தது. சென்​னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், 3 வழித்​தடங்​களில் 116.1 கி.மீ. தொலை​வுக்கு பணி​கள் வேக​மாக நடை​பெறுகின்​றன.

இத்திட்​டத்​தில் கலங்​கரை​விளக்​கம் – பூந்​தமல்லி வரையி​லான 4-வது வழித்​தடத்தை பரந்​தூர் வரை நீட்​டிக்​க​வும், மாதவரத்​தில் இருந்து கோயம்​பேடு வழி​யாக சோழிங்​கநல்​லூர் வரையி​லான 5-வது வழித் தடத்தை கோயம்​பேட்​டில் இருந்து ஆவடி வரை நீட்​டிக்​க​வும் சாத்​தி​யக்கூறு அறிக்கை தயாரித்​து, தமிழக அரசிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டது.

இந்த நீட்​டிப்பு திட்​டங்​களுக்கு விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு கடந்த ஆண்டு பிப்​ர​வரி​யில் அனு​மதி அளித்தது. இதற்​கிடை​யில், கோயம்​பேடு – பட்​டாபி​ராம் (வெளிவட்ட சாலை) வரை நீட்​டிப்பு பரிந்​துரைக்​கான விரி​வான​ திட்ட அறிக்கை தமிழக அரசிடம் கடந்த மாதம் 21-ம் தேதி சமர்ப்​பிக்​கப்​பட்​டது. இதைத்​தொடர்ந்​து, பூந்​தமல்லி – பரந்​தூர் வரை மெட்ரோ ரயில் பாதை நீட்​டிப்​ப​தற்​கான விரி​வானதிட்ட அறிக்கை தமிழக அரசிடம் நேற்று முன்​தினம் சமர்ப்​பிக்​கப்​பட்​டது.

சென்னை தலை​மைச் செயல​கத்​தில் அரசின் சிறப்பு முயற்​சிகள் துறை கூடு​தல் தலை​மைச் செயலர் கே.கோ​பாலிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்​குநர் மு.அ.சித்​திக் சமர்ப்​பித்​தார். இந்​நிகழ்​வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்​குநர் தி.அர்ச்​சுனன், நிதி இயக்​குநர் எஸ்​.கிருஷ்ண​மூர்த்​தி, தலைமை பொது​மேலா​ளர் (திட்​டம், திட்​ட​மிடல் மற்​றும் வடிவ​மைப்​பு) டி.லி​விங்​ஸ்​டோன் எலி​யாசர் உள்பட பலர் உடனிருந்​தனர்.

முன்​மொழியப்​பட்ட மெட்ரோ ரயில் நீட்​டிப்​பு, பூந்​தமல்​லி​யில் இருந்து தொடங்கி செம்​பரம்​பாக்​கம், தண்​டலம், இருங்​காட்​டுக்​கோட்​டை, ஸ்ரீபெரும்​புதூர், சுங்​கு​வார்​சத்​திரம் வழி​யாகச் சென்று பரந்​தூர் விமான நிலை​யத்​தில் முடிவடைகிறது. இது, குத்தம்பாக்​கம் பேருந்து முனை​யம் மற்​றும் முன்​மொழியப்​பட்ட பசுமைவெளி விமான நிலை​யத்​துக்கு தடையற்ற இணைப்பை வழங்கும்.

திட்ட செலவு மற்​றும் செயல்​படுத்​தல் நேரத்தை மேம்​படுத்​து​வதற்​காக, பூந்​தமல்லி மற்​றும் பெரும்​புதூர் இடையே​யான 5.9 கி.மீ. தொலை​வுக்கு இந்​திய தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தால் முன்​மொழியப்​பட்ட உயர்த்​தப்​பட்ட வழித்​தடத்​துடன் இது ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த வழித்​தடத்​தின் 52.94 கி.மீ தொலை​வுடன் 20 உயர்த்​தப்​பட்ட நிலை​யங்​கள் இடம்​பெறும்.

மதிப்​பிடப்​பட்ட நிறைவுசெலவு ரூ.15,906 கோடி. திட்ட அமலாக்​கத்​தின் ஒரு பகு​தி​யாக, பூந்​தமல்லி – சுங்​கு​வார்​சத்​திரம் வரை முதல்​கட்​டத்​தின் கீழ் செயல்​படுத்த ஆலோ​சகர் பரிந்​துரைத்​துள்​ளார். இந்த வழித்​தடத்​தின் மொத்த நீளம் 27.90 கி.மீ. 14 உயர்த்​தப்​பட்ட நிலை​யங்​கள் இடம்​பெற்று உள்ளன மதிப்​பிடப்​பட்ட நிறைவு செல​வு ரூ. 8,779 கோடி ஆகும் என்று மெட்​ரோ ரயில்​ நிறு​வன அதி​காரி​கள்​ தெரிவித்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.