2025- 2026 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நடைபெற இருக்கும் நிலையில், தமிழக பட்ஜெட்டின் இலச்சியினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 6-ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. நாளை காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுடிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறார் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு போன்ற தகவல்களை அவர் வெளியிட இருக்கிறார். அதேபோல், 2025-26-ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவர் அளிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே இந்த அரசு தாக்கல் செய்ய முடியும்.
அதனால், இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம்பெற வாய்ப்புகள் இருக்கிறது. தமிழக பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதனை 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட…#DravidianModel #TNBudget2025 pic.twitter.com/83ZBFUdKZC
— M.K.Stalin (@mkstalin) March 13, 2025
இந்நிலையில் ‘எல்லார்க்கும் எல்லாமும்’ என்ற வாசகத்துடன் 2025- 2026 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டின் இலச்சியினையை ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். மேலும், ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதை முதன்மைப்படுத்தி இலச்சினை வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs