மதிமுக பொதுச்செயலாளர் வைகோ லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த இளையராஜாவை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆதியில், இசை தமிழில் இருந்துதான் வந்தது என்பதற்கு பெருமைச் சேர்க்கும் வகையில் இசைஞானி இளையராஜா செயல்பட்டிருக்கிறார். லண்டனிற்கு சென்று சிம்பொனி இசைத்து மீண்டும் ஒரு முறை நிரூபித்துக்காட்டி இருக்கிறார்.

35 நாட்கள் குறிப்புகள் எடுத்து அதனை இரண்டு நாட்களில் பதிவு செய்து லண்டனில் 90 இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளைக் கொண்டு இசையமைக்க ஓர் அற்புதமான இசைப்படைப்பை தந்திருக்கிறார். உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களின் மனதில் குடிப்புகுந்திருக்கிறார்.
ஆசியக் கண்டத்தில் எவரும் சாதிக்க முடியாததை நம்ம ஊர் பண்ணைக்காரர் இளையராஜா சாதித்துக் காட்டியதை ஒன்றிய அரசு அவர்களின் ஊடகங்களிலும், வானொலியிலும் காண்பிக்காததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மும்பை, கல்கத்தா, டெல்லி என இந்தியாவின் எல்லா இடங்களிலும் இவரின் சிம்பொனி இசையின் புகழ் பரவ வேண்டும். தமிழரின் பெருமையை அறியாதவர்கள்தான் வடநாட்டில் அதிகம்.

இசைஞானி வளம் மென்மேலும் உயர வேண்டும். இந்தியா முழுவதும் அவரது இசை பரவ வேண்டும். இளையராஜாவிற்கு மரியாதை செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு புத்தி வரவில்லையே. லண்டனில் இருந்து டெல்லி வந்த அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…