IPL 2025 RCB: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரின் 18வது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
IPL 2025 RCB: ஆர்சிபியின் தலையெழுத்தை மாற்றுவாரா ரஜத் பட்டிதார்?
இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், குறிப்பாக கேப்டன்களும் மாறி உள்ளனர். கேகேஆர் அணிக்கு அனுபவம் வாய்ந்த அஜிங்கயா ரஹானே கேப்டன்ஸியை பொறுப்பை பெற்றிருக்கும் நிலையில், ஐபிஎல் தொடரில் போதிய அனுபவம் இல்லாத ரஜத் பட்டிதார் (Rajat Patidar) ஆர்சிபியின் கேப்டன்ஸியை பெற்றிருக்கிறார். பலரும் விராட் கோலி மீண்டும் கேப்டன்ஸியை பெறுவார் என எதிர்பார்த்த நிலையில், பலருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் பட்டிதார் கேப்டனாக்கப்பட்டார்.
IPL 2025 RCB: ஆர்சிபியின் காம்பினேஷன் எப்படி இருக்கும்?
இதனாலேயே இந்தாண்டு ஆர்சிபி (Royal Challengers Bangalore) மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 17 சீசன்களாக ஒருமுறை கூட ஆர்சிபி கோப்பையை வென்றதில்லை. கடந்தாண்டு ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் இரண்டாம் பாதையில் தொடர்ந்து 6 போட்டிகளை வென்று எலிமினேட்டர் வரை வந்த ஆர்சிபி, ராஜஸ்தானிடம் மண்ணைக் கவ்வி வெளியேற நேரிட்டது. கடந்த முறை தவறவிட்டதை இந்த முறை ரஜத் பட்டிதார் புதிய காம்பினேஷன் கொண்ட அணியின் மூலம் கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும். அப்படியிருக்க, ஆர்சிபி அணியின் தொடக்க கட்ட பிளேயிங் லெவன் (RCB Playing XI) காம்பினேஷன் மற்றும் இம்பாக்ட் வீரர்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
IPL 2025 RCB: ஆர்சிபி மிரட்டலான ஓப்பனிங்
விராட் கோலி (Virat Kohli) கடந்த முறை போலவே ஓப்பனிங்கில் இறங்கப்போகிறார். கடந்தாண்டு கேகேஆர் அணியில் மிரட்டலான ஓப்பனிங் கொடுத்த பில் சால்ட் இந்த முறை ஆர்சிபி அணிக்காக களமிறங்குவார். சின்னசாமி மைதானம் சிறியதாக இருக்கும் என்ற காரணத்தால் இங்கு இவரின் சிக்ஸர் வாணவேடிக்கையை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம். விராட் கோலி – பில் சால்ட் இணைய மிரட்டலான தொடக்கத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
IPL 2025 RCB: பலமான மிடில் ஆர்டர்
மிடில் ஆர்டரில் கேப்டன் ரஜத் பட்டிதார், ஜித்தேஷ் சர்மா, லியம் லிவிங்ஸ்டன், குர்னால் பாண்டியா ஆகியோர் பலம் சேர்ப்பார்கள் எனலாம். ஜேக்கப் பெத்தெல் விளையாடுவாரா இல்லையா என்பது உறுதியாகாத நிலையில், டிம் டேவிட்டை கூட அவருக்கு பதில் விளையாட வைக்கலாம்.
IPL 2025 RCB: ஆர்சிபி பந்துவீச்சு படை எப்படி இருக்கு?
வேகப்பந்துவீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் விளையாடுவதும் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால் அவருக்கு மாற்று வீரர் யார் என்பதும் இன்னும் உறுதியாகவில்லை. அவர் இல்லாதபட்சத்தில், நுவான் துஷாரா, லுங்கி இங்கிடி உள்ளிட்டோரில் ஒருவரை விளையாடியாக வேண்டும். இருப்பினும், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிப்பார்கள் எனலாம். சுழற்பந்துவீச்சில் லிவிங்ஸ்டன், குர்னால் பாண்டியா நன்கு பங்களிப்பார்கள் என்பதால் சுயாஷ் சர்மா பிரீமியம் ஸ்பின்னராக இருப்பார்.
IPL 2025 RCB: ஆர்சிபிக்கு இருக்கும் ஒரே பின்னடைவு
ரஷிக் தர், தேவ்தத் படிக்கல், ரொமாரியோ ஷெப்பர்டு உள்ளிட்டோரும் காம்பினேஷனில் வர வாய்ப்புள்ளது. ஆர்சிபி அணி அனைத்து பிரிவிலும் பாலமாக இருந்தாலும் ஜேக்கப் பெத்தல் மற்றும் ஜோஷ் ஹசில்வுட்டின் காயம் அவர்களுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
IPL 2025 RCB: ஆர்சிபியின் பிளேயிங் லெவன் மற்றும் இம்பாக்ட் பிளேயர்
விராட் கோலி, பில் சால்ட், ரஜத் பட்டிதார், ஜித்தேஷ் சர்மா, லியம் லிவிங்ஸ்டன், குர்னால் பாண்டியா, ஜேக்கப் பெத்தெல்/டிம் டேவிட், புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்/நுவான் துஷாரா. இம்பாக்ட் வீரர்கள்: ரஷிக் தர்