அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ’டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த கயாடு லோஹர் அஸ்வத் மாரிமுத்துவிற்கும், பிரதீப் ரங்கநாதனிற்கும் நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “என்னுடைய வாழ்க்கையை மாற்றிய படம் ‘டிராகன்’.

பல்லவியாக…
அஸ்வத் மாரிமுத்துவுக்கு நன்றி. பல்லவி கதாபாத்திரத்தின் மூலம் என்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. முதலில் நீங்கள் எனக்கு சொன்ன கதாபாத்திரம் கீர்த்தி கதாபாத்திரம்தான். நானும் நடிக்க ஆர்வமாக இருந்தேன். பின்னர் எனக்கு உங்களிடம் இருந்து எந்தவிதமான அழைப்பும் வராததால் நான் படத்தில் இல்லை என நினைத்துக் கொண்டேன். அதன் பின்னர் திடீரென ஒரு நாள் எனக்கு நீங்கள் இந்த படத்தின் கதையைச் சொல்லி பல்லவி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தீர்கள்.
எனக்கு இரண்டு கதாநாயகிகள் இருக்கும் படம் என்பதால் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் அந்த தயக்கத்தை புரிந்துக்கொண்ட நீங்கள் இந்த படம் உங்கள் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் வகையில் நான் உருவாக்கிக் கொடுக்கிறேன். என்னை நம்புங்கள் எனக் கூறினீர்கள்.
அதேபோல் இந்த படத்தின் மூலம் எனக்கு தமிழில் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுக் கொடுத்துள்ளீர்கள். நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றி கூறுவேன். அதேபோல பிரதீப் ரங்கநாதன், படப்பிடிப்புத் தளத்தில் அதிகம் பேசவில்லை என்றாலும் சினிமாவில் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். ஐரோப்பாவில் உங்களுடன் இருந்த நாட்கள் மறக்க முடியாது” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…