2025 டாடா டியாகோ NRG விற்பனைக்கு வெளியானது.!

கிராஸ் ஹேட்ச்பேக் ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்ற 2025 ஆம் ஆண்டிற்கான டாடா டியாகோ NRG மாடலின் ஆரம்ப விலை ரூ.7.20 லட்சத்தில் துவங்குகின்ற நிலையில், தோற்ற அமைப்பில் சற்று மாறுபட்ட டிசைனை கொண்ட பம்பர், கருமை நிற இன்டீரியர் பெற்றுள்ளது.

டியாகோ காரில் தொடர்ந்து 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் 6000 rpm-ல் 86hp மற்றும் 3300 rpm-ல் 113Nm டார்க் வெளிப்படுத்துவதுடன், சிஎன்ஜி ஆப்ஷனில் 6000 rpm-ல் 77hp மற்றும் 3500 rpm-ல் 97Nm டார்க் வெளிப்படுத்துகிறது. பெட்ரோல், சிஎன்ஜி என இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

மற்ற சாதாரண டியாகோ காரை விட மாறுபட்ட முன் மற்றும் பின்புற பம்பரை கொண்டிருப்பதுடன் ஸ்டீல் வீலில் கொடுக்கப்பட்டுள்ள வீல் கவர் வேறுபட்டதாகவும், கருப்பு நிற கிளாடிங் பேனலுடன் இன்டீரியரில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கின்றது.

  • Tiago NRG XZ – ₹ 7.20 லட்சம்
  • Tiago NRG XZA – ₹ 7.75 லட்சம்
  • Tiago NRG XZ CNG – ₹ 8.20 லட்சம்
  • Tiago NRG XZA CNG – ₹ 8.75 லட்சம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.