கருப்பை வாய் புற்​று​நோயை தடுக்க 14 வயதுள்ள சிறுமிகளுக்கு தடுப்​பூசி: பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு

சென்னை: கருப்பை வாய் புற்​று​நோயைத் தடுக்​க​வும், தமிழகத்​தில் அந்​நோயை அறவே அகற்​றிட​வும், HPV (Human Papilloma Virus) தடுப்​பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்​தைகளுக்​கும் படிப்​படி​யாக வழங்​க​வும் ரூ.36 கோடி நிதி ஒதுக்​கப்​படும் என்று பட்​ஜெட்​டில் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்ட பட்​ஜெட்​டில் கூறி​யிருப்​ப​தாவது: காஞ்​சிபுரம் மாவட்​டம் காரப்​பேட்​டை​யில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்​று​நோய் மருத்​து​வ​மனை மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனம், மாநில அளவி​லான முதன்மை புற்​று​ நோய் மைய​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதை தரம் உயர்த்​தி, 800 படுக்​கைகளு​டன் கூடிய, தன்​னாட்சி பெற்ற மைய​மாக செயல்​படும் வகை​யில் ரூ.120 கோடி நிதி வழங்​கப்​படும்.

இடைநிலை மற்​றும் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில், புற்​று​நோயைக் கண்​ட​றிவதற்​கான நவீன மருத்​து​வக் கருவி​கள் உள்​ளிட்​டவை வழங்க ரூ.110 கோடி ஒதுக்​கப்​படும். கருப்பை வாய் புற்​று​நோயைத் தடுக்​க​வும், தமிழகத்​தில் அந்​நோயை அறவே அகற்​றிட​வும், HPV (Human Papilloma Virus) தடுப்​பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்​தைகளுக்​கும் படிப்​படி​யாக வழங்​க​வும் ரூ.36 கோடி நிதி ஒதுக்​கப்​படும். நடமாடும் மருத்​துவ குழுக்​கள் மூலம் புற்​று​நோய் மற்​றும் இதய நோயைக் கண்​டறிவதற்​கான பரிசோதனை​களை மேற்​கொள்​ளுதல், வாழ்க்​கை​முறை மாற்​றங்​கள் குறித்து ஆலோ​சனை வழங்​குதல் ஆகிய​வற்​றுக்​காக ரூ.40 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

தொற்றா நோய்​களின் பாதிப்​பு​களை எதிர்​கொள்ள மக்​களைத் தேடி மருத்​து​வம் திட்​டம் மூலம் இல்​லங்​களுக்கே சென்​று, உயர் ரத்த அழுத்​தம் மற்​றும் நீரிழிவு நோய்க்​கான பரிசோதனை உள்​ளிட்ட சேவை​கள் 2.20 கோடி பேருக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன. இன்​னு​யிர் காப்​போம் திட்​டம் – நம்​மைக் காக்​கும் 48’ திட்​டம் மூலம் 3,43,156 பேருக்கு ரூ.302 கோடி​யில் சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ளது.

தேசிய நலவாழ்​வுக் குழு​மம் மூலம் செயல்​படுத்​தப்​படும் திட்​டங்​களுக்கு ரூ.2,754 கோடி, டாக்​டர் முத்​துலெட்​சுமி ரெட்டி மகப்​பேறு நிதி​யுதவி திட்​டத்​துக்கு 1,092 கோடி, முதலமைச்​சரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​துக்கு ரூ.1,461 கோடி, அவசர ஊர்தி சேவை​களுக்கு ரூ.348 கோடி பட்​ஜெட்​டில் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. மொத்​தத்​தில் தமிழக பட்​ஜெட்​டில் சுகா​தா​ரத் துறைக்கு ரூ.21,906 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.