ஹோலி: கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் 7 பேர் மீது ரசாயன வண்ணப்பொடி வீச்சு; மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: கர்​நாட​கா​வில் கதக் அருகே ஹோலி கொண்​டாட்​டத்​தின்​போது பள்ளி மாணவி​கள் 7 பேர் மீது மர்ம கும்​பல் ரசாயனம் கலந்த வண்​ணப்​பொடியை வீசினர். இதனால் மூச்​சுத் திணறல் ஏற்​பட்​ட​தால் 7 பேரும் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

கர்​நாடக மாநிலம் கதக் மாவட்​டத்​தில் லக் ஷ்மேஷ்வர் நகரில் நேற்று ஹோலி பண்​டிகை​யின்​போது, பள்ளி மாணவி​கள் 7 பேர் பேருந்து நிலை​யத்​தில் காத்​திருந்​தனர். அப்​போது 3 பைக்​கு​களில் வந்த இளைஞர் கும்​பல் அந்த மாணவி​கள் மீது ரசாயனம் கலந்த வண்​ணப் பொடிகளை வீசினர். இதனால் 7 பேருக்​கும் மூச்சு திணறல், இரு​மல், நெஞ்சு வலி ஏற்​பட்​டது.

இதுகுறித்து தகவலறிந்த போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு வந்​து, பாதிக்​கப்​பட்ட மாணவி​களை கதக் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். பேருந்து நிலை​யத்​தில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவு​களை ஆராய்ந்​து, குற்​ற​வாளி​களை தேடும் பணி​யில் போலீ​ஸார் இறங்​கி​யுள்​ளனர்.

முதற்​கட்ட விசா​ரணை​யில், ரசாயன நீரில் மாட்டு சாணம், முட்​டை, பினா​யில் கலந்து மாணவி​கள் மீது வீசி​யது தெரிய​வந்​துள்​ளது. இந்த ரசாயன நீர் மாணவி​களின் வாய், மற்​றும் மூக்​கின் வழியே உள்ளே சென்​ற​தால் மூச்சு திணறல் ஏற்​பட்​ட​தாக போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.