சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள், பரிசுகள், விவசாயிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா, நவீன சாகுபடிக்கான விருது, வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விருது என பல அசத்தலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பச்சை துண்டுடன் வந்து, மாநில வேளாண் துறை பட்ஜெட்டை பேரவையில் […]
