வானிலையும், வானொலி செய்த சதியும்! – கோடை தினப் பகிர்வு| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

காலை நேரங்கள் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான்.‌ காரணம்.. சமையலறையை‌ ஒட்டிய பால்கனி, சமைத்துக் கொண்டே அங்கு நின்று‌ கொண்டு சூரிய உதயத்தைப் பார்ப்பதும், காலை நேர பறவைகளின் தரிசனங்களும், என்‌ வானொலி பெட்டியின் வழியே காற்றில் கலந்தோடும் பாடல்களும்  தான்.

இரண்டு‌ தென்னை மரங்களுக்கு நடுவே முதலில் ஆரஞ்சும், சிவப்பும் கலந்த நிறத்தில் , பர்ஃபெக்ட்  வட்டவடிவில்  ஆதவன்…, தென்னையின் பச்சை நிறத்திற்கு .. சிவப்பும் , பச்சையும் இந்த கலர் காம்பினேஷன் அவ்வளவு அழகாக இருக்கும். இதன் நடுவே பறந்து செல்லும்‌ பறவைகள் எக்ஸ்ட்ரா ப்யூட்டி.

சிவப்பு சூரிய பந்து சில நிமிடங்களில் தன் பொன்னிறத்திற்கு மாறி ஊருக்கே தன் கதிர்களின் வழியே வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருக்கும். சூரிய கிரகங்களைப் பார்த்தபடி அதன் எதிரில் நின்றால் என் வாழ்நாளுக்குத் தேவையான‌ விட்டமின் D கிடைத்துவிட்டது போல் நினைத்துக் கொள்வேன். 

 நான் வசிக்கும் கோவையில் சென்ற வாரம் முதலே சம்மர்‌ ஸ்டார்ட் ஆகிவிட்டது. 

இரண்டு வாரங்களுக்கு முன்‌ வரை மின்விசிறி அவசியப்படவில்லை.   ஆனால் இப்போது ஏசி போடவேண்டிய நிலை. சூரியனை நம்பி இருக்கும் சின்ன இடத்திலேயே வடகமும் வைத்தாயிற்று.  

ஆனால் இன்று வழக்கம் போல் ஆதவனின்  தரிசனம் கிடைத்தது. காகங்கள், புறாக்கள், மயில்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே, சமைத்தபடி வானொலியில் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தேன். சாதரணமாக காலை ஏழு மணி‌வரை தான் ஆன்மீக பாடல்கள் ஒலிக்கும்.

அதற்குப்பின் எல்லா அலைவரிசைகளிலும் திரைப்படப் பாடல்கள் தான்.. இன்று முதல் பாடலாக .. என் வானிலே ஒரே வெண்ணிலா .. என்ற‌ பாடல் வந்தது. நான் எப்போதும் ரேடியோ வால்யூமை சற்று கூடுதலாக வைத்துக் கொண்டு கேட்கும் பழக்கமுடையவள் .

இந்த பாடல் , ஆதவன் காதுக்கும் சென்றடைந்ததோ என்னவோ.. வானில் தான் இருக்க .. நிலா பாடல் வருகிறதே என கொஞ்சமாக தன்னை மேகத்தினுள் மறைத்துக் கொண்டது. எனக்கோ வைட்டமின் D level குறைந்த ‌ஃபீலிங். 

சரி இந்தப் பாடல் முடிந்தவுடன் மீண்டும் சூரியன் வெளியே வரும்‌ என நம்பினேன். வானொலியில் விளம்பரங்களுக்குப் பிறகு மீண்டும் நிலாப் பாடல்.. நிலாவே வா.. செல்லாதே வா.. இந்த முறை சூரியன் , தன்னை மறைத்தபடியே,  நிலா எங்காவது தென் படுகிறதா எனப் பார்த்தது.

சதியாக அடுத்தடுத்தப் பாடல்களும் நிலாப் பாடல்களாகவே வர, கோபித்துக் கொண்டு சூரியன் வானத்தில் இருந்து மறைந்து விட்டது.  நானாவது வானொலியை சிறிது நேரம் ஆஃப் செய்திருக்கலாம். எனக்குப் பாடல்களை  மிஸ் பண்ண விருப்பமில்லை. ஆதவனை விட்டுப் பிடிக்கலாம் என‌ கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டேன்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாகி விட்டது. விட்டுச் சென்ற சூரியன்‌ மீண்டும் ‌வரவில்லை.  கிச்சன் வேலைகளை முடித்து வானொலியையும் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டேன்.  நானும் ,, நான் சூரியனை நம்பி தயாரித்த வடகமும்..  சூரியனுக்காக waiting….!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.