உற்சாகத்துக்குப் பஞ்சமில்லாதவர் நடன இயக்குநர் பாபா பாஸ்கர். நடன நிகழ்ச்சிகளின் நடுவர், திரைப்படங்களுக்கு நடன அமைப்பு, நடிப்பு என பரபரப்பாக இருப்பவர். சந்திக்கச் சென்றால், துறு துறு உடல்மொழியுடன் பம்பரமாய் சுற்றிக்கொண்டே அனைவரிடமும் சிரித்த முகத்தோடு பேசிக்கொண்டிருந்தார். அங்கேயே அவரிடம் ஒரு குட்டி சாட் போட்டோம்.

`நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, `இட்லி கடை’னு இயக்குநர் தனுஷ்கூட பரபரப்பாக இணைந்து வேலை பார்த்துட்டு இருக்கீங்களே….
`நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் ஓர் அற்புதமான பயணம்னுதான் சொல்லணும். நமக்கு வழிகாட்டியாக இருந்த தனுஷுடைய கற்பனைல உருவான திரைப்படம் அது. அந்தப் படத்துல ரொம்பவே ஈடுபாட்டோட இணை இயக்குநர் மாதிரியே நான் வேலைகளை கவனிச்சேன். அதே மாதிரி `இட்லி கடை’ படத்துல நான் ஒரு உதவி இயக்குநர்தான். என்னை உருவாக்கினவருக்கு என்னால முடிஞ்ச சின்ன உதவியாக நான் அதை பண்ணினேன்.
`இட்லி கடை’ திரைப்படத்தில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம்?
நீங்க பாருங்க ப்ரோ! `இட்லி கடை’ படம் நிச்சயமாக சூப்பரா இருக்கும். அந்தப் படம் பயங்கரமான எமோஷன் சார்ந்தது. உழைக்கிற மக்களுக்கு டீ கடை ஒரு எமோஷன். அதுபோல இட்லிக்குன்னு ஒரு மதிப்பு இருக்குல. அந்த எமோஷன் இந்த திரைப்படத்துல நிச்சயமாக தெரியும்.

`ஜனநாயகன்’ திரைப்படத்துல நீங்க ஒரு முக்கியமான அங்கமாக இருக்கீங்கன்னு கேள்விபட்டோமே…
முக்கியமான பகுதி கிடையாது. ஆனால், படத்துல ஒரு பகுதியாக இருக்கேன். தளபதிகூட தோளோட ஒரு பக்கம் நின்றால் போதும் நமக்கு. தளபதி விஜய் உண்மையாகவே சிறந்த மனிதர். பக்கத்துல இருக்கிற எல்லோரையும் வளர்த்துவிடுகிற எண்ணம் தளபதி விஜய் சாருக்கு இருக்கு. விஜய் சார் சீக்ரெட்டாக நிறைய பேரை வளர்த்துவிட்டுட்டு இருக்கார். திறமைகள் கொண்ட இளம் தலைமுறையினரை தட்டிக்கொடுக்க தளபதியைப்போல வேற யாரும் இல்ல. இந்த வரிசையில நடிகர் சிம்புவும் வருவாரு. இப்போ நாங்க படத்துல நடிக்கும்போது விஜய் சார் எங்களுக்கு நல்ல இடம் கொடுக்கிறாரு. `நான் வேணா மாஸ்டர் தோள்ல கையை வச்சிட்டு நிக்கவா’னு கேட்பாரு. இன்னமும்கூட எங்களையெல்லாம் வளர்த்துவிடுகிறாரே!

இன்னைக்கு இங்க உங்களை கவனிக்கும்போது ஒரு விஷயம் தெரியவந்தது. அனைத்து நடன கலைஞர்களுக்கும் சமமாக அன்பைக் கொடுக்கிறீங்க! வாஞ்சையோடு எல்லோரையும் அரவணைச்சு பேசுறீங்க ! எங்க இருந்து இந்த குணம் வந்தது ?
(மென்மையாக சிரித்துக் கொண்டே…) மனிதர்கள்தான் மிகப்பெரிய பொக்கிஷம். ஒவ்வொரு சூழல்ல ஒவ்வொரு மனிதன் நமக்கு கெட்டவனாக தெரிவாங்க. ஆனால், அவங்க எல்லோருமே நல்லவங்கதான்! ஒரு சூழல்தான் ஒருவனை தீமையின் பக்கம் கொண்டு போகுது.மனிதர்கள் அனைவருமே போற்றப்பட வேண்டியவர்கள்தான். உழைக்கும் வர்கமாகிய அவர்களை நாம குறைவில்லாமல் பார்த்துக்கணும். அப்படி பண்ணினால் வேலை சிறப்பாகவும் சந்தோஷமாகவும் நடக்கும்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…