ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் ‘கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா’ நிகழ்ச்சியில் இயக்குநர் லிங்குசாமி கலந்துகொண்டு, பல விஷயங்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் சினிமாக் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கும் அவர், அஜித் குறித்தும் பேசியிருக்கிறார். அஜித் குறித்துப் பேசிய லிங்குசாமி, ” இன்னைக்கு அஜித் ஒரு இடத்தை பிடிச்சிருக்காருல… அதை அன்னைக்கே அவர் என்கிட்ட சொல்லிட்டாரு. ஒருநாள் படத்தின் சூட்டிங்கின்போது கேரவனில் உட்கார்ந்துப் பேசிக்கிட்டு இருந்தோம். ‘ஜி நம்மதான் ஜி, முதல் இடத்துக்கு நம்மதான் ஜி வருவோம்’ அப்படின்னு சொல்லுவாரு. அதைப் பார்க்கும்போது சிலருக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ் மாதிரி இருக்கும்.

ஆனால் அது அப்படி கிடையாது. வர்றோம், தட்டுறோம், தூக்குறோம், அப்படின்னு ரொம்ப பாசிட்டிவா இருப்பாரு. ஒரு ட்ரீம்லேயே இருப்பாரு. அந்த விஷயத்தைப் பத்தி மட்டுமே நினைச்சிட்டு இருப்பாரு. நம்ம இந்த இடத்துக்கு வந்து சேருவோம். நமக்கான இடம் இருக்குன்னு அவர் சொல்லிட்டே இருப்பாரு. அவர்கிட்ட இருந்து வர அந்த வாய்ஸ், அந்த லுக் எல்லாமே எம்.ஜி.ஆர் மாதிரி இருக்கும்.
அஜித் கிட்டையும் இதை நான் சொல்லிருக்கேன். ‘ஜி என்ன பெரிய வார்த்தையெல்லாம் சொல்றிங்கனு’ சொல்லுவாரு. ஆபீசர் மாதிரிதான் வருவாரு. சினிமா நடிகரா இல்ல கார்ப்பரேட் சிஇஓ-வானு கேட்க தோணும். அந்த மாதிரி இருப்பாரு. ஆனா வேலையில கரெக்ட்டா இருப்பாரு. டப்பிங்கில 50 தடவ பேச சொன்னாலும் பேசுவாரு.

எடுத்த சீனைத் திருப்பி எடுத்தாக்கூட கேட்க மாட்டாரு. அவர் படத்துக்கு இப்பவும் மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கு. அவர் என்ன நினைத்தாரோ அந்த இடத்தை அடைஞ்சிட்டாரு. ரொம்ப பாசிட்டிவாக இருக்கக்கூடியவர்” என்று நெகிழ்ச்சியாக அஜித் பற்றி பகிர்ந்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…