விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதால் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதி

அரசுப் பள்​ளி​யில் ஆசிரியர் தாக்​கிய​தால் பாதிக்​கப்​பட்ட மாணவர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இதையடுத்து, மாணவரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

விழுப்​புரம் மாவட்​டம் கோலியனூர் அரு​கே​யுள்ள வி.அகரம் கிராமத்​தில் அரசு ஆதி​தி​ரா​விடர் நல உயர்​நிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இப்​பள்​ளி​யில் நேற்று முன்​தினம் 6-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவர், தன்​னுடன் பயிலும் சக மாணவி ஒரு​வருடன் சண்​டை​யிட்​டு, கையால் அடித்​துள்​ளார். இதைக்​கண்ட உடற்​கல்வி ஆசிரியர் செங்​கேனி சண்​டையை தடுத்து நிறுத்​தி, அந்த மாணவரை அடித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

பின்​னர், அந்த மாணவர் வாந்தி எடுத்​து, மயங்கி விழுந்​துள்​ளார். உடனே பள்​ளி​யில் இருந்த ஆசிரியர்​கள் அந்த மாணவரை அரசமங்​கலம் ஆரம்ப சுகா​தார நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர். அங்கு முதலுதவி அளிக்​கப்​பட்ட பின்​னர், முண்​டி​யம்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் மாணவர் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டார். பின்​னர், மேல்​சிகிச்​சைக்​காக புதுச்​சேரி ஜிப்​மர் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்டார்.

பள்ளி முற்றுகை… இந்​நிலை​யில், மாணவரைத் தாக்​கிய உடற்​கல்வி ஆசிரியர் செங்​கேனி மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி மாணவரின் பெற்​றோர் மற்​றும் உறவினர்​கள் 60-க்​கும் மேற்​பட்​டோர் வி.அகரம் அரசு உயர்​நிலைப் பள்​ளியை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தகவலறிந்த வளவனூர் போலீ​ஸார் அங்கு சென்​று, போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதையடுத்து, விழுப்​புரம் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர் அறிவழகன், சம்​பந்​தப்​பட்ட பள்ளிக்கு நேரில் சென்​று, பாதிக்​கப்​பட்ட மாணவரின் உறவினர்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். மேலும், பள்​ளி​யில் பணி​யாற்றி வரும் ஆசிரியர்​களிடம் விசா​ரணை மேற்​கொண்​டார்.

போலீஸார் வழக்கு பதிவு: தொடர்ந்​து, மாணவரைத் தாக்​கிய உடற்​கல்வி ஆசிரியர் செங்​கேனியை பணி​யிடை நீக்​கம் செய்​தும், பள்​ளி​யின் தலைமை ஆசிரியை ஜோதிலட்​சுமியை பணி​யிட மாற்​றம் செய்​தும் முதன்​மைக்கல்வி அலு​வலர் உத்​தர​விட்​டார். இதற்​கிடை​யில், மாணவரின் தந்தை வளவனூர் காவல்​நிலை​யத்​தில் கொடுத்த புகாரின்​பேரில், உடற்​கல்வி ஆசிரியர் மற்​றும் தலைமை ஆசிரியை மீது போலீ​ஸார் வழக்​கு பதிவு செய்​து, வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.