Virat Kohli: "சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை சோசியல் மீடியாவில் பகிராதது ஏன்?" – கோலி விளக்கம்

2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தயாரிப்புகள் மிகவும் விமரிசையாக நடந்துவருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் தங்களது அணியினருடன் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். நேற்று ஆர்சிபி அணியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விராட் கோலி சமூக வலைத்தள பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டது குறித்துப் பேசியுள்ளார்.

சாதனைகளுக்காக அல்ல; விளையாட்டின் மீதான காதலுக்காக…

முன்னதாக விராட் கோலியின் ஓய்வு பற்றி எழும் வதந்திகளுக்கு முடிவு கட்டும் விதமாக, தற்போது தனது மனதில் ஓய்வு பற்றிய சிந்தனை இல்லை எனக் கூறியுள்ளார் விராட்.

சாம்பியன்ஸ் டிராபி 2025 வெற்றிக்குப் பிறகு, விராட் கோலி 2027 தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு ரசிகர்களிடம் ஆதரவு பெருகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐபிஎல் தொடருக்காகத் தயாராகிவரும் விராட் கோலி, தனது கரியரின் முக்கியமான இந்த கட்டத்தில், சாதனைகளை நோக்கி அல்லாமல், விளையாட்டை நேசித்து விளையாடுவதாகக் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் பற்றி Virat Kohli…

முன்னதாக ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவந்த கோலி, தற்போது ஆன்லைனில் மிகவும் குறைவாகச் செயல்படுகிறார். இதற்கான முக்கிய காரணமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றவில்லை எனக் கூறியுள்ளார்.

விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 270 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர், எக்ஸ் தளத்தில் 66.1 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். சமீப காலமாக அவரது சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் பற்றிய பதிவுகளை விட விளம்பரங்களே அதிகம் பதிவிடப்படுகின்றன.

Virat Kohli in AD

சாம்பியன்ஸ் டிராபி வெற்றியைக் கூட அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல், விளம்பரங்களைப் பகிர்ந்தது ரசிகர்களிடம் கேள்வியை எழுப்பியது.

இதுகுறித்து, “நான் சமூக வலைத்தளங்களில் பதிவிடாததற்குக் காரணம், எந்த குறிக்கோளும் இல்லாமல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அழிவுகரமானது. சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மக்களின் கமெண்ட்கள் என்னிடம் எந்த ரியாக்‌ஷனையும் வரவழைப்பதில்லை என்பதால் நான் எதையும் பதிவிடவும் அவசியமில்லை” எனக் கூறியுள்ளார்.

விராட் கோலி

2025 ஐபிஎல்லின் முதல் போட்டியில் ஆர்.சி.பி அணி, நடப்பு சாம்பியனான கே.கே.ஆர் அணியுடன் வரும் 22ம் தேதி மோதுகிறது. விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதால் வழக்கம் போல் ரசிகர்களுக்கு அவரிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய கேப்டனின் (ரஜத் படிதர்) கீழ் விளையாடப்போகும் விராட் தனது அனுபவத்தின் மூலம் அணிக்குத் தூணாக விளங்குவார் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்!

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.