இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி 2025 கோப்பையை வென்ற கையோடு ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார். ஐபிஎல் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், நேற்று (மார்ச் 15) விராட் கோலி பெங்களூரு வந்தடைந்தார். இந்நிலையில், ஆர்சிபி இன்னோவேஷன் லேப்ஸ் இந்தியன்ஸ் ஸ்போர்ட்ஸ் நிகழ்வின் போது, விராட் கோலி எதிர்வரும் டெஸ்ட் போட்டிகள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், நான் மிகவும் ஏமாற்றமடைந்த தொடர் என்ன என்று கேட்டால், அது சமீபத்தில் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான். அந்த தொடர் எனது மனத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நீண்டகாலமாகவே 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடர் என்னை காயப்படுத்திக்கொண்டே இருந்தது.
மேலும் படிங்க: ஐபிஎல்லில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர் யார் தெரியுமா?
2028ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆடும் சூழல் எனக்கு தற்போது இல்லை. அது குறித்து என்னால் இப்போது எதுவும் கூற முடியவில்லை. 2014ஆம் ஆண்டு நடந்த மோசமான இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு என்னால் 2018ஆம் ஆண்டு தான் பதிலடி கொடுக்க முடிந்தது. ஆனால் இப்போது அதை போல் என்னால் செய்ய இயலாது. நீங்கள் நீண்ட காலமாக நன்றாக விளையாடி கொண்டிருந்தால் மக்கள் உங்கள் செயல்பாடுகளுக்கு பழகிவிடுவார்கள். அதுவே சில நேரம் உங்களை விட அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். இது நிச்சயம் மாற்றப்பட வேண்டிய ஒன்று.
வெளியில் இருக்கும் எதிர்பார்ப்புகளை நீங்கள் எடுத்துக்கொண்டால், உங்களை நீங்களே அதிக சுமைக்கு ஆளாக்கி கொள்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படி எடுத்துக்கொள்ளும் போது, நீங்கள் அதிக ரன்கள் சேர்க்க வேண்டும், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பீர்கள். இதை நான் ஆஸ்திரேலியா தொடரின் போது அனுபவித்தேன். நான் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டேன். அப்போது இந்த தொடர் சிறப்பாக அமையும் என நினைத்தேன். ஆனால் எல்லாம் தலைகீழாக நடந்தது. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்டால் தான் அடுத்து என்ன செய்ய வேண்டும், நம்மின் நிறை குறைகளை என்ன என்பதை அறிந்து செயல்பட முடியும் என்றார் விராட் கோலி.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி ஒரு போட்டியில் மட்டும் சதம் அடித்தார். ஆனால் மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் அவர் மிக மோசமாக விளையாடி ஒரே மாதிரியாக ஆட்டமிழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: தோனி என்னை பைத்தியம் என நினைத்திருப்பார் – விராட் கோலி கலகல பேச்ச