பஞ்சாப் மாநிலத்தில் மதவழிபாட்டு தலத்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். அமிர்தசரஸ் நகரில் உள்ள ஹோட்டல் ராடிசன் அருகே தாகூர் துவாரா மந்திர் அறக்கட்டளைக்கு சொந்தமான கோயில் ஒன்றின் மீது மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை அதிகாலை இந்த தாக்குதல் நடந்துள்ளது. கோயில் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். […]
