மின்சார சிக்கனம்… சிறந்த செயல் திறன் கொண்ட ஏசியை தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்

கோடைகாலம் நெருங்கி விட்டது. முன்பெல்லாம் சித்திரை மாதம் தான் வெயில் காலம் தொடங்கும். ஆனால் இப்போது பங்குனி பிறந்தாலே, கோடை காலம் ஆரம்பமாகி விடுகிறது. வெயில் காலத்தில், கடும் வெப்பத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள மின்விசிறி எல்லாம் இப்போது போதுமானதாக இல்லை. ஏசி தேவையாக உள்ளது.

ஏசி வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்

கோடை காலத்தில் ஏசி (Air Conditioner) விற்பனை பெருமளவு அதிகரித்து விடும். மேல் தட்டு மக்கள் மட்டுமல்லாது, நடுத்தர வர்க்கத்தினரும் அதிக அளவில் ஏசி வாங்குவதை காணலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதற்கு, இஎம்ஐ கடன் வசதி கிடைப்பதால், அனைவராலும் வாங்க முடியும் நிலையில் உள்ளதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஏசி வாங்கும் போது சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு வாங்குவதால், மின்சார செலவுகளை பெருமளவு குறைப்பதோடு, பராமரிப்பு செலவுகளையும் சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.

1. ஏசி வாங்குவது எளிதுதான். அதற்கான மின்சார கட்டணம் செலுத்துவது தான் சற்று சவாலான விஷயம். மின்சார சிக்கனத்துடன் கூடிய, நல்ல ஸ்டார் மதிப்பு கொண்ட ஏசி வாங்குவதால், மின்சாரத்தை சிறப்பாக சேமிக்கலாம். பொதுவாக பைவ் ஸ்டார் மதிப்பு கொண்ட ஏசிக்கள், மின்சார சிக்கனத்திற்கு சிறந்த தீர்வாக இருக்கும். விலை சற்று அதிகம் என்றாலும், உங்களுக்கு நீண்ட கால மின்சார சேமிப்பு இருக்கும்.

2. ஏசி வாங்க திட்டமிடும்போது, எந்த வகையான ஏசி தேவை என்பதை நமது தேவைக்கேற்ப முடிவு செய்ய வேண்டும். தற்போது ஸ்பிலிட் ஏசி மற்றும் விண்டோ ஏசி என இரு வகைகள் உள்ளன. உங்களது பட்ஜெட் குறைவாக இருந்தால், ஜன்னலில் பொருத்தக்கூடிய விண்டோ ஏசி வாங்குவது நல்லது. இதற்கான பராமரிப்பு செய்யவும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும்.

3. பட்ஜெட் பிரச்சனை இல்லை என்றால், ஸ்ப்ளிட் ஏசி வாங்கலாம். இது அறையின் தோற்றத்தை மேம்படுத்துவதோடு, சத்தம் இல்லாமல் செயல்படும் என்பதால், நிம்மதியாக தூங்க வசதியாக இருக்கும்.

4. உங்கள் பயன்பாட்டை பொருத்தும் நீங்கள் ஏசி வகையை தேர்ந்தெடுக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு சுமார் 8 முதல் 10 மணி நேரம் பயன்படுத்தும் நிலை இருந்தால், 5 ஸ்டார் மதிப்பீடு கொண்ட ஏசியை வாங்குவது சிறப்பு. குறைந்த பயன்பாடு இருந்தால், 3 ஸ்டார் மதிப்பு கொண்ட ஏசியே போதுமானதாக இருக்கும்.

5. 3 ஸ்டார் மதிப்பீடு கொண்ட ஏசியுடன் ஒப்பிடுகையில், 5 ஸ்டார் மதிப்பீடு கொண்ட ஏசி வகைகள், சிறப்பு அம்சங்கள் மற்றும் நல்ல இன்சுலேஷன் ஆகியவற்றை கொண்டதாக இருக்கும். ஆனால், விலை அதிகமாக இருக்கும்

6. உங்கள் அறையின் அளவை பொறுத்து, அதற்கு ஏற்ற கூலிங் திறன் கொண்ட ஏசி வாங்குவது சிறப்பு. பெரிய அளவிலான அறைக்கு குறைந்த திறன் கொண்ட ஏசி வாங்குவதால், குளிர்விக்க, ஏசி அதிக நேரம் இயங்கும் நிலை ஏற்படும். இது ஏசியின் செயல் திறனை பாதிப்பதோடு, அடிக்கடி பழுது பார்க்கும் நிலையும் இந்த ஆகலாம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.