கடந்த 14,15 ஆகிய இரு நாள்களில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடந்தது. இதில் 3140 இந்திய பக்தர்கள் பங்கேற்றனர். கச்சத்தீவு திருவிழாவினை முன்னிட்டு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல 5 நாள்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கச்சத்தீவு திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 403 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று நள்ளிரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.
இலங்கை கடற்படையினரின் முற்றுகையினால் பதற்றம் அடைந்த மீனவர்கள் தங்கள் படகுகளை கரையை நோக்கி திருப்பியதுடன், இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் தப்பி வந்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் தங்களிடம் சிக்கிய தங்கச்சிமடத்தை சேர்ந்த கென்னடி என்பவரின் விசைப்படகை சிறைபிடித்தனர்.

அந்த படகில் இருந்த மீனவர்கள் அர்ச்சுனன், சங்கர், முருகேசன் ஆகிய 3 மீனவர்களையும் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை விசாரணைக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த வாரம் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மீனவர் சங்க நிர்வாகிகள் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் மீண்டும் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks