சென்னை: தமிழ்நாடு முழுவதும் 7,783அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,783 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து, தமிழ்நாடு சமூக நலத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் இருக்கும் காலிப்பணி யிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, அங்கன்வாடிகளில் இருக்கும் 7,783 […]
