சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட கடைகளின் பெயா் பலகை தமிழில் இருக்க வேண்டும் என மாநகர மேயர் பிரியா அறிவித்து உள்ளார். சென்னை, அண்ணா நகா் எம்.எம்.டி.ஏ. காலனி பிரதான சாலை தபால் நிலையம் அருகில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தின்கீழ் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரத்தை வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்து வைத்த மேயா் ஆா்.பிரியா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பெருநகர சென்னை மாநகராட்சியில் 2021-ஆம் ஆண்டு ‘மீண்டும் மஞ்சப்பை’”என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு […]
