ஜியோ, ஏர்டெலுக்கு ஆப்பு.. வோடபோன் ஐடியா அசத்தல் ரீசார்ஜ் பிளான் அறிமுகம்

Vodafone Idea Recharge Plan: இந்திய தொலைத்தொடர்பு சேவை துறையில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நிறுவனமாக வோடபோன் ஐடியா உள்ளது. சுமார் 2.20 கோடி வாடிக்கையாளர்கள் கொண்ட வோடபோன் ஐடியா நிறுவனம், 4ஜி இணைய சேவையை தொடர்ந்து தற்போது 5ஜி சேவையை தொடங்கி இருக்கிறது. முதற்கட்டமாக வோடபோன் ஐடியா (Vi) 5G நெட்வொர்க் சேவையை மும்பையில் தொடங்கப்பட்டது, விரைவில் இந்த சேவை பீகார், டெல்லி, கர்நாடகா மற்றும் பஞ்சாபிலும் கிடைக்கும். வோடபோன் ஐடியா (Vi) தனது புதிய 5G மைக்ரோசைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் பயனர்களுக்கு 5G இணைப்பு மற்றும் புதிய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விவரத்தை பெறலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், Vi அனைத்து 5G திட்டங்களுடனும் அன்லிமிடெட் 5G தரவை வழங்கப் படுகிறது…

Vi 5G சேவை: மும்பையில் முதல்கட்டமாக தொடங்கம்-

வோடபோன் ஐடியா (Vi) இன் இணையதளத்தின் படி “Lightning-fast connectivity with Vi 5G” மற்றும் “Welcome to a new era of communication” போன்ற குருஞ்செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி 5G இணைப்பின் நன்மைகளை விளக்கும் விதமாக வலைத்தளத்தில் முழு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் வட்டத்தை (மாநிலம்/நகரம்) தேர்ந்தெடுப்பதன் மூலம் 5G கவரேஜ் தகவலைச் சரிபார்க்கலாம். தற்போது மும்பையில் மட்டுமே 5G சேவை நேரடியாக தொடங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பீகார், டெல்லி, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய நாடுகளில் ஏப்ரல் 2025க்குள் இதைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Vi 5G ப்ரீபெய்ட் திட்டங்கள்:

ப்ரீபெய்டு பயனர்களுக்கு மலிவு விலையில் 5G திட்டங்களை Vi அறிமுகப்படுத்தியுள்ளது.

• ரூ299 திட்டம் – 1ஜிபி டேட்டா/நாள் 28 நாட்கள் வேலிடிட்டி.

• ரூ349 திட்டம் – ஜிபி டேட்டா/நாள் 28 நாட்கள் வேலிடிட்டி.

• ரூ365 திட்டம் – 2ஜிபி டேட்டா/நாள் உடன் 28 நாட்கள் வேலிடிட்டி.

• ரூ3,599 திட்டம் – 22ஜிபி டேட்டா/நாள் 365 நாட்கள் வேலிடிட்டி.

இந்த அனைத்து திட்டங்களுடனும் அன்லிமிடெட் 5G தரவும் தரப்படும்.

Vi 5G போஸ்ட்பெய்டு திட்டங்கள்:

போஸ்ட்பெய்டு பயனர்களுக்கான புதிய 5G திட்டங்களையும் Vi அறிமுகப்படுத்தியுள்ளது:

• Vi Max 451 – மாதம் ₹451க்கு 50GB டேட்டா.

• Vi Max 551 – மாதம் ₹551க்கு 90GB டேட்டா.

• Vi Max 751 – மாதம் ₹751க்கு 150GB டேட்டா.

• Vi REDX 1201 – மாதம் ₹1,201க்கு வரம்பற்ற டேட்டா.

இந்த போஸ்ட்பெய்டு திட்டங்களிலும், 5G கவரேஜ் கிடைக்கும் இடங்களில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படும்.

இந்நிலையில் முதல்கட்டமாக வோடபோன் நிறுவனம் 17 நகரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு வட்டங்களில் மட்டுமே தொடங்க உள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.