சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த நிரந்தர தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது. அதற்கு பதில் மாற்று இடம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் இனிவரும் நாட்களில் எந்த ஒரு போராட்டமும் நடத்த அனுமதியில்லை என சென்னை மாநகர காவல் ஆணையாளர் அருண் அறிவித்து உள்ளார். சென்னை மாநகரின் மையப் பகுதியில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில், அடிக்கடி அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் […]
