How To Book IPL 2025 Tickets Online : ஐபிஎல் 2025 மெகா கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் இந்தியா முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது என ஆன்லைனில் தேடத்தொடங்கியுள்ளனர். இதனால் கூகுள் டிரெண்டிங்கில் ஐபிஎல் 2025 டிக்கெட், ஐபிஎல் 2025 டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி, ஐபிஎல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்குவது எப்படி, ஐபிஎல் 2025 டிக்கெட் எங்கு வாங்குவது போன்ற கீவேர்டுகள் டிரணெடிங்கில் இடம்பிடித்துவிட்டன. அதனால் ஐபிஎல் 2025 தொடருக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் எப்படி எங்கு வாங்குவது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. நடப்பு ஐபிஎல் சாம்பியனாக இருக்கும் அந்த அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோத இருக்கிறது. இதனால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் தேடத்தொடங்கியுள்ளனர். எப்படியாவது ஒரு டிக்கெட்டையாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.
ஆனால், ஐபிஎல் 2025 போட்டியை மைதானத்தில் பார்க்க உங்களுக்கு டிக்கெட் வேண்டும் என்றால், புக்மை ஷோ, பேடிஎம் போன்ற பேமெண்ட் பிளாட்பார்ம்களுக்கு தான் செல்ல வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு அணியும் கடந்த ஆண்டைப் போலவே ஒவ்வொரு அணியுடன் பார்ட்னர்ஷிப் போட்டுள்ளன. அதன்படி ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விளையாடும் போட்டிகளை எந்தெந்த பிளாட்பார்ம்களில் வாங்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஐபிஎல் 2025 ஆன்லைன் டிக்கெட் பெறுவது எப்படி?
குஜராத் டைட்டன்ஸ் (அகமதாபாத்): BookMyShow
சென்னை சூப்பர் கிங்ஸ் (சென்னை): Paytm Insider
மும்பை இண்டியன்ஸ் (மும்பை): BookMyShow
டெல்லி கேபிடல்ஸ் (டெல்லி): Paytm Insider
பஞ்சாப் கிங்ஸ் (மொகாலி): BookMyShow
ராஜஸ்தான் ராயல்ஸ் (ஜெய்பூர்): Paytm Insider
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (லக்னோ): Paytm Insider
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ஹைதராபாத்): Paytm Insider
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கொல்கத்தா): BookMyShow
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மட்டும் தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (royalchallengers.com) டிக்கெட்டுகளை விற்பனை செய்யும்.
ஐபிஎல் 2025 டிக்கெட் விலை எவ்வளவு?
ஐபிஎல் 2025 தொடருக்கான டிக்கெட் விலைகளை பொறுத்தவரை குறைந்தபட்சம் 900 ரூபாய், அதிகபட்சம் 10,000 ரூபாய்க்கும் அதிகம். ஆனால் இந்த டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன. டிமாண்ட் காரணமான குறைந்த விலையில் டிக்கெட்டுகளே இல்லை.
Bookmy Show-ல் ஐபிஎல் 2025 டிக்கெட் புக் செய்வது எப்படி?
– Bookmy Show செயலி அல்லது வலைதளத்துக்கு செல்லுங்கள்.
– இதுவரை உங்களுக்கு கணக்கு இல்லை என்றால் புதிதாக கணக்கை உருவாக்கவும்.
– லாகின் ஆன பிறகு ஐபிஎல் 2025 டிக்கெட் ஆப்சனை தேர்வு செய்யவும்
– அதில் நீங்கள் விரும்பும் போட்டி மற்றும் மைதானத்தை தேர்வு செய்ய வேண்டும்
– உங்களுக்கு விருப்பமான இருக்கை வகையை தேர்வு செய்யவும்
– பணம் செலுத்தி டிக்கெட்டை புக் செய்து கொள்ளவும்
பார்ப்பதற்கு எளிதாக தோன்றலாம். உண்மையில் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விலைகளுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. இதனால் அவ்ளவு எளிதில் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் கிடைத்துவிடாது. சிலர் முன்கூட்டியே புக் செய்து அதனை ஆப்லைனிலும் விற்பனை செய்கின்றனர்.