இந்தியாவில் 90 சதவீத மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர் என்கின்றன தரவுகள். தொலைதொடர்பு வசதிகள், நமது வாழ்க்கையை எளிதக்கியுள்ளது என்றாலும், தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் மூலம் பலர் மோசடிக்கு ஆளாவதையும் பார்க்கிறோம். இதனை தடுக்கும் வகையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI விதிகளையும் வழிமுறைகளையும் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், ஸ்பேம் கால் பிரச்சனை தீர உதவும் சில எளிய டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
ஸ்பேம் அழைப்புகள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ் பெரிய பிரச்சனையாகிவிட்டன. இவை நம் நேரத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல், பல நேரங்களில் சைபர் மோசடிக்கு பலியாகி நஷ்டத்தையும் சந்திக்கும் நிலையும் ஏற்படுகிறது. ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளால் பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு, இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று, ஸ்மார்போன்கள் பயன்பாடு பெருகி விட்ட இந்த காலகட்டத்தில், பாதுகாப்பாக இருக்க, ஸ்பேம் கால்களில் இருந்து தப்பிக்கும் சில எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்
1. DND ( Do Not Disturb) சேவை
ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளிலிருந்து விடுபட இது எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும். உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநரின் வாடிக்கையாளர் சேவையை அழைப்பதன் மூலம் நீங்கள் DND சேவையை செயல்படுத்தலாம். DND சேவையை ஆக்வேட் செய்த பிறகு, விளம்பர அழைப்புகள் மற்றும் செய்திகள் பிளாக் செய்யப்பட்டுவிடும்
2. ஸ்பேம் அழைப்பைத் தடுக்கும் செயலிகள்
கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் செய்திகளைத் தடுக்க உதவும் பல ஆப்ஸ்கள் உள்ளன. இந்தப் செயலிகள் ஸ்பேம் அழைப்புகளைக் கண்டறிந்து அவற்றை பிளாக் செய்கின்றன.
3. தொலைபேசியிலிருந்து எண்ணை பிளாக் செய்தல்
ஸ்மார்ட்போன்களில் எண்களை பிளாக் செய்யும் வசதி உள்ளது. தெரியாத எண்ணிலிருந்து நீங்கள் தொடர்ந்து அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் செய்திகளைப் பெற்றால், பிளாக் செய்யலாம்.
4. அரசாங்க போர்ட்டலில் புகார் செய்யலாம்
உங்களுக்கு தொடர்ந்து ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் செய்திகள் வந்தால், TRAI என்னும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய இணையதளத்திற்குச் சென்று அல்லது அவர்களின் ஹெல்ப்லைன் எண்ணை அழைப்பதன் மூலமும் ஸ்பேம் அழைப்புகள் குறித்து புகார் செய்யலாம்.
5. சைபர் மோசடியில் இருந்து தப்பிக்க
தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களை தெரியாத நபர்களுடன் பகிர வேண்டாம். இதனுடன், சந்தேகத்திற்குரிய எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம்.