Mumbai Indians New Captain : ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பிரேங்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது. அந்த அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டயா முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியா இழந்திருப்பதால் அவருக்கு பதிலாக இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த செய்தியை ஹர்திக் பாண்டியாவே உறுதிபடுத்தியிருக்கிறார். ஹர்திக் பாண்டியா ஏன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் போட்டியில் விளையாடமாட்டார், ஏன் அவருடைய கேப்டன் பொறுப்பு சூர்யகுமார் யாதவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
ஐபிஎல் 2025 தொடர் தொடக்கம்
ஐபிஎல் கிரிக்கெட் லீக் திருவிழா பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மார்ச் 22 ஆம்தேதி தொடங்க உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதனையொட்டி ஆன்லைனில் வெளியிடப்பட்ட டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஐபிஎல் தொடக்க விழாவும் அங்கு நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தநாள் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன.
மும்பை அணியில் அதிரடி மாற்றம்
இப்போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த ஆண்டு விளையாட உள்ளார். அநேகமாக இதுவே அவருடைய கடைசி ஐபிஎல் தொடராக இருக்க வாய்ப்புள்ளது என்பதால் தோனியை ஒருமுறையாவது சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் பார்த்துவிட வேண்டும் என டிக்கெட்டுக்காக தவம் கிடைக்கின்றன. இந்த சூழலில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. அந்த அணியின் தொடக்க போட்டியில் அதாவது சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் புதிய கேப்டன்
கடந்த ஆண்டு கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் குறித்த நேரத்துக்குள் அந்த அணி பந்துவீசி முடிக்கவில்லை. இதனால் பிசிசிஐ விதிப்படி தொடர்ச்சியாக அல்லது இரண்டு போட்டிகளில் ஒரு அணி தாமதமாக பந்துவீசினால் அந்த அணியின் கேப்டன் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுவார். அந்த விதிமுறைப்படி ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் போட்டியில் விளையாடமாட்டார். இதனால் கேப்டன் பொறுப்பையும் இழந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் மாற்று கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணியை வழிநடத்த இருக்கிறார்.
மேலும் படிங்க: ஷிகர் தவான் to ஹர்பஜன் சிங்: சினிமாவிற்கு சென்று மொக்கை வாங்கிய 5 கிரிக்கெட் வீரர்கள்
மேலும் படிங்க: 17 ஆண்டுகளாக ஏன் ஆர்சிபி சாம்பியன் ஆகவில்லை.. காரணத்தை போட்டு உடைத்த முன்னாள் ஆர்சிபி வீரர்!