கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் 2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என முக்கிய வீரர்களே கேப்டனாக இருந்த தங்களது அணியை விட்டு வேறு அணிகளுக்கு மாறினர்.
இதில் ரிஷப் பண்ட் லக்னோ அணிக்கு கேப்டனாவும் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் இத்தொடரில் பயணம் செய்ய உள்ளனர். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று தந்தார். தற்போது பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஆகி இருக்கிறார். இந்த நிலையில், வரயிருக்கும் ஐபிஎல் தொடரில் தனது இலக்கு என்ன என்பது குறித்து பேசி இருக்கிறார்.
கோப்பைதான் எனது இலக்கு
இது குறித்து Superstars on JioHotstar நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். அதில் அவர் பேசியதாவது, நான் மெகா ஏலத்தில் தேர்வானபோதே எனது நோக்கமானது தெளிவாக இருந்தது. பஞ்சாப் அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. எனவே அதை செய்து காட்டுவதே எனது இலக்கு. இது வரலாற்று சாதனையாக இருக்கும்.
மேலும் படிங்க: CSK vs MI: அதிக முறை வென்றது இந்த அணிதான்!
Ball Boy டூ பஞ்சாப் கேப்டன்
2008 ஐபிஎல் தொடங்கிய வருடம் அது. நான் அப்போது மும்பை அணி U-14 அணிக்காக விளையாடினேன். அதனால் எங்களை Ball boy ஆக தேர்வு செய்தனர். அது நான் ஐபிஎல்- ஐ அனுபவிக்கும் நெருக்கமான தருணம். தொடக்கத்தில் சிறிது தயக்கமாக இருந்தது. ஆனால், எனது நண்பர்கள் வீரர்களுடன் பேசுவதை பாத்தவுடன் நானும் முயற்சித்தேன்.
நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் எனக்கு மிகவும் பிடித்தமானவர். எனவே அவரிடம் சென்று, “சார் நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்” என கூறினேன். அதற்கு அவரும் “நன்றி” எனக் கூறினார். அந்த காலகட்டத்தில் பேட் அல்லது கிளவுஸ்களை கேட்பது வழக்கம். ஆனால் நான் அதனை கேட்பதற்கு தயங்கினேன். கேட்டிருக்கலாமோ என இன்று வரை தோன்றும். அதேபோட்டியில் இர்பான் பதானிடமும் பேசினோம். அவர் எங்கள் அருகில் அமர்ந்து நாங்கள் போட்டியை ரசிக்கிறோமா என்று கேட்டார். நாங்கள் ரொம்பவே ரசிகிறோம். உங்களை கண்டதில் மகிழ்ச்சி என கூறினோம் என்றார்.
தொடர்ந்து, கிரிக்கெட் கமெண்டரியில் பிராந்திய மொழிகளில் பேசுவது கேட்டபோது, நாங்கள் அதை ரசிக்கிறோம். தொடக்கத்தில் இருந்தே நாங்கள் டிரெஸிங் ரூமில் சொந்த மொழிகளில் பேசிக்கொள்வோம். முதன்முதலாக தாய் மொழியில் கமெண்ட்ரி கேட்கும் போது, சற்று குழப்பமாக இருந்தது. கிரிக்கெட்டில் இப்படியும் சொல்லலாமா என்று என தெரிவித்தார்.
மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் மீண்டும் மாற்றம் – பரபரப்பு பின்னணி