Airtel Recharge Plan With For 60 Days: இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் வோடபோன் ஐடியா (vi), ஜியோ (Jio), ஏர்டெல்(Airtel) உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் ஏர்டெல் நிறுவனம் மக்களுக்கு நல்ல நெட்வொர்க் மற்றும் பல மலிவான மற்றும் உபயோகமான ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் (Airtel Prepaid Recharge Plan) கூடுதல் சலுகைகளையும் வழங்குகி வருகிறது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது நீங்களும் ஏர்டெல் சிம் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இரண்டு மாதங்களுக்கு நல்ல சேவை வழங்கும் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காணலாம்.
ஏர்டெல் பல்வேறு நன்மைகளுடன் வரும் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. அதில் ஒன்று தான் ரூ.619விலை உள்ள ரீசார்ஜ் திட்டமாகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல்லின் வலைத்தளத்தில் விரிவாக காணலாம்.
ரூ.619 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
ஏர்டெல் ரூ.619 ப்ரீபெய்ட்திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். அதன்படி ஏர்டெல் ரூ.619 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தமாக 90ஜிபி டேட்டாவை பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.619 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes),உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
இந்நிலையில் நீங்களும் கம்மி பட்ஜெட்டில் அதிக வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை பெற விரும்பினால் ஏர்டெலின் ரூ.619 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம். ஒருவேளை ஓடிடி நன்மை, அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் நீங்கள் தினசரி 2ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். குறிப்பாக வேலிடிட்டி காலம் இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கு கிடைக்கும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி ஐ பெற முடியும். இது தவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் மொத்தம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை இந்த ரீசார்ஜ் திட்டத்ததில் பெறலாம். அதனுடன் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.