பெங்களூர்,
எக்ஸ்’ சமூக வலைதளத்தில் கருத்துகளை தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்துவதாக கூறி, கர்நாடக ஐகோர்ட்டில் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது. எக்ஸ் நிறுவனம் தனது மனுவில் கூறியிருப்பதாவது: ஐ.டி., சட்டத்தில் குறிப்பாக பிரிவு 79(3)(பி) ஆகிய பிரிவை மத்திய அரசு பயன்படு்த்துகிறது. இது, ஆன்லைனில் தடையற்ற கருத்து பரிமாற்றத்தை தடை செய்வதுடன், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு எதிராக உள்ளது. சட்டப்பிரிவு 69ஏ விதிமுறைகளை மீறி, இணையதள உள்ளடக்கத்தை தடுக்க ஐ.டி., சட்டத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது
உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையான தணிக்கையை விதிக்க அதிகாரிகள் 79(3)(b) பிரிவை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். பிரிவு 79(3)(b) ஐ அரசு ஒரு குறுக்கு வழியாகப் பயன்படுத்துகிறது. இதனால் உரிய ஆய்வு இல்லாமல் உள்ளடக்கத்தை அகற்ற அனுமதிக்கப்படுகிறது. தன்னிச்சையான தணிக்கையைத் தடுக்கும் சட்டப் பாதுகாப்புகளை பிரிவு 79(3)(b) நேரடியாக மீறுகிறது” என தெரிவித்துள்ளது.