Thug Life Update: தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் எப்போது? டீசர் வெளியீடு எங்கே? அசத்தல் அப்டேட்ஸ்

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ ரிலீஸ் வருகிற ஜூனில் என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் இது.

படப்பிடிப்பில்..

36 ஆண்டுகளுக்குப் பிறகு

‘நாயகன்’ படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், ‘தக் லைஃப்’ எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது.

‘தக் லைஃப்’ கூட்டணி

”நானும், மணிரத்னமும் எப்போதும் இணைந்து பணிபுரிய ரெடியாகத்தான் இருந்தோம். காரணம், நாங்கள் இரண்டு பேரும் இணையும்போது, அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதனால்தான் நாயகனுக்குப் பிறகு இவ்வளவு தாமதம்” என்கிறார் கமல்ஹாசன்.

மராத்தி நடிகர்கள்

‘தக் லைஃப்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கமலுடன் சிலம்பரசன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், சேத்தன், அலி ஃபைசல், வடிவுக்கரசி, சானியா மல்ஹோத்ரா எனப் பலரும் நடிக்கின்றனர்.

இதில் அலி பைசல், ‘மிர்சாபூர்’ என்ற வெப் சீரீஸ் மூலம் கவனம் பெற்றவர். இவர் தவிர, மராத்தி நடிகர்களும் படத்தில் உள்ளனர்.

சென்னை, கோவா உள்பட சில இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. கமல், சிலம்பரசன் இருவரும் பல்வேறு விதமான தோற்றங்களில் வருவதாகச் சொல்கிறார்கள். அடுத்தடுத்து அவர்களின் லுக்குகள் வெளியாகிறது.

Thug Life

த்ரிஷாவும் சிம்புவும்

படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷாவும் செம ஆட்டம் போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலில் த்ரிஷாவும் சிம்புவும் இணைந்து ஆடியிருக்கின்றனர்.

துள்ளலான பாடல் என்றும் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து இந்த பாடலைப் படமாக்கியிருக்கிறார்கள் என்றும் பேச்சு இருக்கிறது.

Thug Life Lyric Video

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் படத்தின் லிரிக் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது முதல் சிங்கிள், ஏப்ரல் முதல் வாரத்திலோ அல்லது, தமிழ்ப் புத்தாண்டிலோ வெளியாகிறது.

Thug Life

அதனைத் தொடர்ந்து இன்னொரு பாடலும் ரிலீஸ் ஆகிறது. மே மாதத்தில் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டையும் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர்.

அனேகமாக நேரு ஸ்டேடியமாக இருக்கலாம் என்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் கான்சர்ட் முழங்கக் கமல், மணிரத்னம், ஜோஜூ ஜார்ஜ் என ஆளுமைகளின் கூட்டணியில் அரங்கம் களைகட்ட காத்திருக்கிறது என்கின்றார்கள்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.