அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தும்போது பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடவில்லை: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த இந்​தி​யர்​களை அமெரிக்கா நாடு கடத்​தும்போது பெண்​கள், குழந்​தைகளின் கைகளில் விலங்கு போட​வில்லை என்று நாடாளு​மன்​றத்​தில் மத்​திய அரசு விளக்​கம் அளித்​துள்​ளது.

அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு பல்​வேறு அதிரடி நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறார். அதன்​படி அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருப்​பவர்​களை அவர​வர் நாட்​டுக்கு திருப்பி அனுப்பி வரு​கிறார். அதன்​படி முறை​யான ஆவணங்​கள் இன்றி தங்​கி​யிருந்த இந்​தி​யர்​களை​யும் அமெரிக்கா ராணுவ விமானத்​தில் திருப்பி அனுப்​பியது. அப்​போது இந்​திய பெண்​கள், குழந்​தைகள் உட்பட அனை​வரின் கை, கால்​களில் விலங்​கிட்டு நாடு கடத்​தி​ய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதற்கு எதிர்க்​கட்​சி​யினர் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், நாடாளு​மன்​றத்​தில் இதுகுறித்து உறுப்​பினர்​கள் எழுப்​பிய கேள்வி​களுக்கு மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் நேற்று எழுத்​துப்​பூர்​வ​மாக பதில் அளித்​தது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த பிப்​ர​வரி 5-ம் தேதி அமெரிக்​கா​வில் இருந்து நாடு கடத்​தப்​பட்டபோது இந்​தி​யர்​கள் பலர் தாய்​நாடு வந்​தனர். அவர்​களு​டைய கை, கால்​களில் விலங்​கிட்டு அழைத்து வந்​த​தாக புகார் எழுந்​தது. இதுகுறித்து அமெரிக்க அரசின் கவனத்​துக்கு மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் உடனடி​யாக கொண்டு சென்று கண்​டனத்தை பதிவு செய்​தது. அதன்​பிறகு பிப்​ர​வரி 15 மற்​றும் 16-ம் தேதி​களில் அமெரிக்​கா​வில் இருந்து நாடு கடத்​தப்​பட்ட இந்​தி​யர்​கள் தாய்​நாடு வந்​தடைந்​தனர். அவர்​களுக்கு குறிப்​பாக பெண்​கள், குழந்​தைகளின் கை, கால்​களில் விலங்​கிட​வில்லை என்று அமெரிக்க அதி​காரி​கள் உறு​தி​யாக தெரி​வித்​தனர். இதை இந்​திய தூதரக அதி​காரி​கள் மற்​றும் நாடு கடத்​தப்​பட்டு இந்​தியா வந்​தடைந்​தவர்​களிடம் நேரடி​யாக விசா​ரணை நடத்தி உறுதி செய்​யப்​பட்​டது.

அமெரிக்​கா​வில் இருந்து நாடு கடத்​தும்போது பாது​காப்பு காரணங்​களுக்​காக கை, கால்​களில் விலங்​கிடு​வது கடந்த 2012-ம் ஆண்டு முதல் அமலில் உள்​ளது. அந்த விதி​முறை​களின்​படி​தான் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருப்​பவர்​களை நாடு கடத்​தும்​போது அமெரிக்க அரசு விலங்​கிட்டு அனுப்​பு​கிறது. எனினும், இந்​திய பெண்​கள், குழந்​தைகளின் கை, கால்​களில் விலங்​கிடப்​பட​வில்​லை. இவ்​வாறு மத்​திய வெளி​யுறவுத் துறை தெரி​வித்​துள்​ளது. விசா முடிந்த பிறகு அல்லது சட்டவிரோதமாக குடியேறிய குற்றத்துக்காக கடந்த ஜனவரி​யில் இருந்து இது​வரை 388 இந்​தி​யர்​கள், அமெரிக்​கா​வில் இருந்து நாடு கடத்​தப்​பட்​டு தாய்​நாடு வந்​தடைந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.