இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று காலமானார். இதய பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த அவர் நேற்று (25.03.2025) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

அவரின் உடல் அவருடைய சேத்துப்பட்டு இல்லத்தில் இருந்து நீலாங்கரை இல்லத்திற்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை நாலு மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலர் இரங்கல் தெரிவித்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். தனது நீலாங்கரை வீட்டில் இருந்து மாலை உடன் வந்த விஜய், நண்பர் சஞ்சய் உடன் நடந்தே சென்று மனோஜ் பாரதிராஜா உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

அந்த இடத்தில் ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்த நிலையில், விஜய் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.