RR vs KKR: "கடந்த போட்டியிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம்" – பவுலிங்கை தேர்வு செய்த ரஹானே

ஐபிஎல் இன்றைய போட்டியில் ராஜஸ்தானும், கொல்கத்தாவும் களமிறங்கின. தங்களின் முதல் போட்டியில் தோல்வியடைந்த இரு அணிகளின் கேப்டன்களும் இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்யத் தீவிரமாக முன்வந்தனர். டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

RR vs KKR
RR vs KKR

அதைத்தொடர்ந்து பேசிய ரஹானே, “முதலில் பந்துவீசினால், இந்த மைதானம் எப்படி இருக்கிறது என்று ஒரு ஐடியா கிடைக்கும். பனி முக்கிய காரணியாக இருக்கிறது. டி20 கிரிக்கெட் என்பது ஒவ்வொரு நாளும் உங்களின் பெஸ்ட்டை கொடுக்க வேண்டிய ஃபார்மெட். கடந்த போட்டியிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். சுனில் நரேனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மொயின் அலி இடம்பெறுகிறார்” என்று கூறினார்.

அவரைத்தொடர்ந்து பேசிய ரியான் பராக், “இந்த அணியை வழிநடத்துவது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த நிர்வாகம் என் மீது வைத்த நம்பிக்கை, என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்று. கடந்த ஆட்டத்தில் இருந்து நிறைய நேர்மறையான விஷயங்கள் எடுத்துக்கொண்டோம். மிடில் ஆர்டர் உண்மையில் முன்னேறியிருக்கிறது. பந்துவீச்சிலும் நிறைய பாசிட்டிவ்ஸ் இருக்கிறது. ஃபரூக்கிக்கு பதில் ஹசரங்கா உள்ளே வருகிறார்.

சுனில் நரைன்
சுனில் நரைன்

கொல்கத்தா பிளெயிங் லெவன்:

குயின்டன் டி காக் (WK), ரஹானே (C), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், மொயின் அலி, ரஸல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன், வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா

இம்பேக்ட்: நோர்க்கியா, மணீஷ் பாண்டே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், லுவ்னித் சிசோடியா.

ராஜஸ்தான் பிளெயிங் லெவன்:

ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக் (C), நிதிஷ் ராணா, துருவ் ஜூரல் (WK), ஹெட்மயர், ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா

இம்பேக்ட்: குணால் சிங் ரத்தோர், ஷுபம் துபே, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, குவேனா மபாகா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.