மனோஜ் பாரதிராஜா: "கனிவான ஆன்மா… உடைந்து போனேன்" – சிலம்பரசன் இரங்கல்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவை ஒட்டி திரைபிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Simbu, Manoj Bharathiraja

அந்தவகையில் நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அன்பு நண்பர், சக நடிகர் மனோஜ் பாரதிராஜா மறைவால் மனம் உடைந்து போனேன். அவர் ஒரு அன்பான மனிதர், கனிவான ஆன்மா. பாரதிராஜா சாருக்கும் அவரது குடும்பத்துக்கும் என் ஆழந்த அனுதாபங்கள். அவர் (மனோஜ்) அமைதியில் இருக்கட்டும்.” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் சாந்தனு, “மனோஜ் பாரதிராஜா நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்பதை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாரதிராஜா சாருக்கும் அவரது மொத்த குடும்பத்துக்கும் என் ஆழந்த அனுதாபங்கள்.

மனோஜ் பாரதிராஜா பெரிய கனவுகளையும், ஆசைகளையும் கொண்டிருந்தார், அவற்றை நிறைவேற்றாமல் சென்றுள்ளார். அவரது எதிர்பாராத மறைவு பல இதயங்களில் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சகோ.” எனப் பதிவிட்டுள்ளார்.

Manoj Bharathiraja Funeral

இதய பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த மனோஜ் பாரதிராஜா நேற்று (25.03.2025) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவரின் உடல் அவருடைய சேத்துப்பட்டு இல்லத்தில் இருந்து நீலாங்கரை இல்லத்திற்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை வரை அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பெசன்ட் நகர் மின் தகன மையத்தில் தகனம் செய்யப்பட்டது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.