குடும்ப ரீதியா பாதிக்கப்படுவார்னு யோசிச்சேன்; ஆனா வேற வழியில்ல – Hard Disk விவகாரம் குறித்து சோனா

சோனாவின் வெப் சீரிஸ்

`என்னுடைய `ஸ்மோக்’ வெப்சீரிஸ் படக் காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கை மேனேஜர் ஒருவர் எடுத்து வைத்துக்கொண்டு தர மறுக்கிறார், அவரிடமிருந்து டிஸ்க்கை வாங்கித் தரவேண்டும்’

இப்படிச் சொல்லி பெப்சி அலுவலக வாசலில் தர்ணாவில் ஈடுபட்ட நடிகை சோனாவின் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. ஹார்டு டிஸ்க் சோனா வசம் தரப்பட்டுவிட்டதாம். `ஸ்மோக்’ சோனாவின் வாழ்க்கை குறித்த பயோ பிக் என்கிறார்கள்

எப்படி முடிந்தது இந்த விவகாரம் என சோனாவிடமே கேட்டோம்.

‘’பல மாசங்களா கஷ்டப்பட்ட போதும், நாமெல்லாம் ஒரு குடும்பம்கிற ஒரே உணர்வுலதான் இந்த விஷயத்தைப் பொதுவெளிக்குக் கொண்டு வராம இருந்தேன். அதுவும் போக சம்பந்தப்பட்ட அந்த மேனஜருக்கு மூன்று பெண் குழந்தைகள். புகார் அது இதுன்னு போனா வேலை இழந்து குடும்ப ரீதியா பாதிக்கப்படுவார்னு யோசிச்சேன்.

சோனா

ஆனா அவரோ ‘நான் அப்படிதான் பண்ணுவேன், உன்னால என்னை என்ன பண்ண முடியும்கிற தோரணையிலயே நடந்துகிட்டு இருந்தார். அவருக்கு சப்போர்ட்டுக்கு அவர் மாதிரியே குணாதிசயங்களைக் கொண்டவங்க சிலர் இருந்தாங்க. அதனால வேற வழியில்லாமதான் தர்ணா மாதிரியான ஒரு விஷயத்தைக் கையிலெடுக்க வேண்டி வந்தது.

சினிமா இண்டஸ்ட்ரியில நான் ஒரு விஷயத்துல இறங்கிட்டேன்னா, அதுல ஒரு தீர்வு வாங்காம திரும்பமாட்டேன்னு பலருக்குத் தெரியும். இப்பவும் அதேபோலத்தான் நல்ல தீர்வு கிடைச்சிருக்கு.

தர்ணா முடிஞ்ச மறுநாளே நடிகர் சங்கத்துல இருந்து சில நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பிரச்னை குறித்துக்கேட்டாங்க. நடிகர் கருணாஸ் ‘பாத்துக்கலாம், நாங்க இருக்கோம்’னு சொன்னார். நடிகர் சங்கம் தலையிடுதுன்னு தெரிஞ்சதும் உடனே பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட்டாங்க. பெப்சி தலைவர் செல்வமணி சார் நடிகர் சங்கத்தின் சில நிர்வாகிகள் கலந்துகிட்ட அந்தக் கூட்டத்துல நடந்த எல்லாத்தையும் அப்படியே சொன்னேன்.

ஒருகட்டத்துல அவங்களுக்கே நான் ஏமாத்தப்பட்டேன்கிறது புரிஞ்சிடுச்சு. சம்பந்தப்பட்ட அந்த நபரைக் கூப்பிட்டு ஹார்டு டிஸ்க்கைக் கொடுக்கச் சொல்லிட்டாங்க.

சீரியலில் சோனா

அதுக்கு மேல என்ன சொல்ல முடியும்? சம்மதிச்சு ஹார்டு டிஸ்க்கைக் எடுத்துக் கொடுத்தார்.

சுமுகமா இந்தப் பிரச்னையை முடிச்சிருக்கலாம். ஆனா, சிலருடைய இறுமாப்பான போக்கால்தான் பஞ்சாயத்து வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.

பரவால்ல, இப்பவாச்சும் முடிஞ்சதேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான். இந்த நேரத்துல இந்த விஷயத்துல எனக்கு உதவிய பெப்சி நிர்வாகத்துக்கும் நடிகர் சங்கத்துக்கும் எனக்கு ஆதரவா நின்ன அத்தனை பேருக்கும் கூடவே மீடியாவுக்கும் என் நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன்’ என முடித்தார் சோனா.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.