ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் போது, போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர் இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் காயமடைந்தனர். மார்ச் 25ம் தேதி சட்டமன்ற கூட்டத்தின் போது சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர் மேலும், இரவு வரை உள்ளிறுப்புப் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து காங்கிரஸ் சட்டமன்றக் […]
