IPL 2025 CSK vs RCB Playing 11: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியது. விராட் கோலி மற்றும் பில் சால்ட் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர், பவுலிங்கில் க்ருனால் பாண்டியா மற்றும் ஹேசல்வுட் சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு உதவினர்.
மறுபுறம் சென்னை அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியுள்ளது. ஜடேஜா, அஸ்வின் மற்றும் நூர் அகமதின் சுழலில் மும்பை இந்தியன்ஸ் அணியை எளிதாக வீழ்த்தினர். இதனால் ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் கூடுதல் ஸ்பின்னர்களை வைத்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணிக்கு முதல் போட்டியில் பவுலிங் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. குறைவான டார்கெட்டை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றனர். ராகுல் திருப்பாதி, தீபக் ஹூடா, சாம் கரண் ஆகியோர் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. இதனால் சாம் கரணுக்கு பதிலாக டேவான் கான்வே அணிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
FAN FRIDAY IT IS!
Start. The. Whistles! #CSKvRCB #WhistlePodu pic.twitter.com/lmy0BBm3KN
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2025
அதேபோல கூடுதல் ஆல்ரவுண்டராக அன்சுல் கம்போஜ் இடம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தீபக் ஹூடாவிற்கு பதில் விஜய் ஷங்கர் இடம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணி சென்னையை வீழ்த்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப்க்கு சென்று விடலாம் என்று இருந்த நிலையில், சென்னையை வீழ்த்தி ஆர்சிபி பிளே ஆப்க்கு சென்றது. இதனால் இன்றைய போட்டியில் சென்னை அணி இதற்கு பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கிளம்பி உள்ளது.
சிஎஸ்கே கணிக்கப்பட்ட ப்ளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேவான் கான்வே, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது, விஜய் ஷங்கர்
ஆர்சிபி கணிக்கப்பட்ட ப்ளேயிங் லெவன்: விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரசிக் தார் சலாம்/ஸ்வப்னில் சிங், சுயாஷ் ஷர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்