கடன் தர மறுத்ததால் வங்கியில் ரூ.13 கோடி தங்க நகை திருட்டு: மதுரை பேக்கரி கடைக்காரர் உட்பட 6 பேர் கைது

பெங்களூரு: கர்​நாட​கா​வின் தாவணகெரே மாவட்​டத்​தில் உள்ள‌ நியாமதி டவுனில் பாரத ஸ்டேட் வங்கி உள்​ளது. க‌டந்த ஆண்டு இந்த வங்​கி​யில் ரூ.13 கோடி மதிப்​பிலான 17.7 கிலோ எடை​யுள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்​கப்​பட்​டது. வங்​கி​யில் இருந்த சிசிடிவி கேம​ராக்​களை​யும் திருடிச் சென்​றனர். இதனால் குற்​ற​வாளி​களை உடனடி​யாக கண்​டறிவ​தில் சிக்​கல் ஏற்​பட்​டது.

இதனிடையே நியாமதி டவுனை சேர்ந்த உள்​ளூர் குற்​ற​வாளி​களை​யும் பிடித்து விசா​ரணை நடத்​தினர். அப்​போது உள்​ளூரை சேர்ந்த சிலர் அதில் ஈடு​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது. வங்கி கொள்ளை சம்​பவம் நடந்த தினத்​தில் இருந்து நியாம​தி​யில் இருந்த ஐயங்​கார் பேக்​கிரி மூடப்​பட்டு கிடந்​த​தால், போலீ​ஸார் சந்​தேகம் அடைந்​தனர்.

இதனையடுத்து கடந்த வாரம், பேக்​கரி கடை உரிமை​யாளர் விஜயகு​மாரை பிடித்து விசா​ரணை நடத்​தினர். அப்​போது, அவர் வங்​கி​யில் ரூ.15 லட்​சம் கடன் கேட்​ட​தாக​வும், அதனை தர மறுத்​த​தால் கொள்​ளை​யர்​கள் மூலம் நகைகளை திருடிய‌​தாக​வும் ஒப்​புக்​கொண்​டார். இதையடுத்து போலீ​ஸார் கொள்ளை சம்​பவத்​தில் ஈடு​பட்ட‌ விஜயகு​மாரை​யும், அவரது சகோ​தரர் அஜய்​கு​மார், நியாமதி டவுனை சேர்ந்த அபிஷே​கா, சந்​துரு, மஞ்​சு​நாத், பரமானந்தா ஆகிய 6 பேரை​யும் கைது செய்​தனர்.

மதுரையை சேர்ந்த விஜயகு​மார் கொள்​ளை​யடித்த தங்க நகைகளை உசிலம்​பட்டி அருகே விவ​சாய கிணற்​றில் கண்​டெ​யினரில் வைத்து பதுக்கி வைத்​திருப்​ப​தாக கூறி​னார். அங்கு விரைந்த தனிப்​படை போலீ​ஸார், நீச்​சல் வீரர்​கள் மூலம் ரூ.13 கோடி மதிப்​பிலான தங்க நகைகளை மீட்​டனர்.

இதுகுறித்து தனிப்​படை அதி​காரி சாம் வர்​கீஸ் கூறுகை​யில், “மதுரையை சேர்ந்த பேக்​கரி உரிமை​யாளர் விஜயகு​மார் கடந்த 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக நியாமதி டனில் பேக்​கரி தொழில் செய்து வரு​கிறார். தனது கடனை அடைப்​ப​தற்​காக வங்​கி​யில் ரூ.15 லட்​சம் கடன் கேட்டு விண்ணப்பித்துள்​ளார். அவரது விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​பட்​ட​தால் தனது சகோ​தர் அஜய்​கு​மார் மூலம் கொள்​ளை​யர்​களை திரட்​டி, வங்கி கொள்ளை​யில் ஈடுபட்​டுள்​ளார். மனி ஹெயிஸ்ட் வெப் சீரிஸை பார்த்து இந்த கொள்ளை சம்​பவத்​தில்​ ஈடு​பட்​ட​தாக வாக்​குமூலம்​ அளித்​துள்​ளார்​” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.