சென்னை: தமிழ்நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவுகள் வழங்க வேண்டும் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். நாடாளுமன்ற மக்களவையில், தென்சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வந்தேபாரத் ரயில்கள் இயக்கம் பற்றி கேள்விகள் கேட்டிருந்தார். இதற்கு ரெயில்வேத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து, அதன்மீது துணைக்கேள்வியையும் தமிழச்சி தங்கபாண்டியன் கேட்டார். அதாவது, “தமிழ்நாட்டில் 11 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். ரெயில் […]
