பெங்களூரு: ரேபிடோ, ஓலா, உபேர் போன்ற தனியார் பைக் டாக்ஸி நிறுவனங்களின் கூட்டமைப்பு, கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவையை அனுமதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த மனுவை நேற்று நீதிபதி ஷியாம் பிரசாத் விசாரித்து, ‘‘பைக் டாக்ஸி சேவைக்கு விதிமுறைகளை உருவாக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை பைக் டாக்ஸி சேவையை 6 வாரங்களுக்கு கர்நாடகாவில் நிறுத்த வேண்டும். அதற்குள் அரசு சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்’’என உத்தரவிட்டார்.