ராமேஸ்நரம் ராமேஸ்வரத்துக்கு பிரதமர் மோடி வருவதால் கோவில் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. நாளை பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தற்போது ராமேஸ்வரம் முழுவதும் பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு சுமார் 3,500 […]
