பாட்னா,
பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 7 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரமோத் சிங், அவரது மகன் பன்டி குமார் மற்றும் பப்பு சிங் ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனு என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள புல்பதியா தேவியின் உடலை தகனம் செய்வதற்காக பக்ஸருக்குச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.