அகமதாபாத்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள குஜராத் சென்ற மூத்த காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில், இன்று மற்றும் நாளை (ஏப்ரல் 8 மற்றும் 9 ந்தேதி) ல் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் […]
